சென்னை: நாடு முழுவதும் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் தமிழ்நாட்டில் 10 பேர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் கோவை உள்பட பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். கோவையில் வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத அமைப்பு மீது, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் PFI (Popular Front of India) மற்றும் CFI ( Campus Front of India) ஆகியவை SIMI (இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்) தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள், 2020-ம் ஆண்டு டெல்லி கலவரம், ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலைக்கு எதிரான போராட்டங்கள் மேலும் பல சம்பவங்களுக்கு இந்த அமைப்பு நிதிஉதவி அளித்ததாககுற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்த 93 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை ஏன் என்பது குறித்து என்ஐஏ விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில் குற்றச்செயல்களில் பிஎஃஐ ஈடுபட்டு வருகிறது என்றும், க்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த பிஎப்ஐ வன்முறை செயல்கள் ஈடுபடுகிறது என்று தெரிவித்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டின் 13 மாநிலங்களில் 300-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின்போது, பயங்கர ஆயுதங்கள், ஏராளமான பணம், சர்ச்சைக்குரிய ஆவணங்கள், செல்போன்கள், லேப்டாப்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பல்வேறு அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அமைப்பினர், பிற மதம் சார்ந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களை கொலை செய்தல், கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டியது போன்ற வன்முறை செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளது. பிரபலமான நபர்கள், இடங்கள் மீது தாக்குதல் நடந்துவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு ஆதரவு, பொதுச்சொத்தை அழித்தல் போன்றவை பயங்கரவாத தாக்குதல் மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்க இந்த அமைப்பால் முயற்சிக்கப்பட்டுள்ளது’ என என்.ஐ.ஏ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் விடிய விடிய என்ஐஏ நடத்திய ரெய்டில் 106 பிஎஃப்ஐ பிரமுகர்கள் கைது!