பி.எப்.ஐ பந்த்; பஸ்கள் உடைப்பு – ஐகோர்ட் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொச்சி: கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு நடத்திவரும் கடையடைப்பின் போது பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று (செப்.,22) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கேரளாவில் பந்த்தை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது கொல்லம், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹெல்மெட் அணிந்தபடி டிரைவர்கள் பஸ்சை இயக்கினர்.

latest tamil news

இதனையடுத்து கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, வழக்கமாக கேரளாவுக்கு இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதே போல கேரளாவில் இருந்து கோவைக்கு பெரும்பாலான கேரள மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த தீடீர் பந்த் காரணமாக தினமும் கேரளா சென்று வரும் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் அவதியுற்றனர். சில பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. பி.எப்.ஐ பந்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

latest tamil news

‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை நடக்கிறது. அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுகிறது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை ஏற்க முடியாது. அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தி, வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதை மாநிலஅரசு தடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.