பெங்களூர் நிறுவனத்துக்கு அடித்துக்கொள்ளும் ITC, நெஸ்லே..!

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் FMCG துறையில் பெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களான ரிலையன்ஸ், அதானி குரூப், டாடா குழுமம் நுழைந்துள்ள காரணத்தால் இத்துறையில் இருக்கும் பிற நிறுவனங்கள் புதிய திட்டத்தில் இறங்கியுள்ளது.

பொதுவாகச் சந்தையில் போட்டி அதிகரிக்கும் போது பொருட்களின் விலையைக் குறைத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது வழக்கம் ஆனால் தற்போது போட்டியாகப் புதிய நிறுவனங்கள் வந்துள்ளதால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது தான் சரியாக இருக்கும்.

இந்தப் பணியில் தான் தற்போது பல முன்னணி FMCG நிறுவனங்கள் இறங்கியுள்ளது.

டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

 FMCG நிறுவனங்கள்

FMCG நிறுவனங்கள்

இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தைத் துவங்குவதற்குப் பதிலாகச் சந்தையில் பிரபலமாக இருக்கும் பிராண்டுகளைக் கைப்பற்றுவது எனக் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது பெங்களூர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி சூடுப்பிடித்துள்ளஎது.

யோகா பார்

யோகா பார்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யோகா பார் என்னும் 8 வருட ஆரோக்கியமான ஸ்னாக் பார்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்தப் பிராண்டின் தாய் நிறுவனமான Sproutlife சந்தையில் புதிதாக 150 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் திரட்ட திட்டமிட்டு உள்ளது.

டாபர் மற்றும் A91 கோப்பிடல்
 

டாபர் மற்றும் A91 கோப்பிடல்

யோகா பார் பிரண்டில் முதலீடு செய்யப் பல முன்னணி FMCG நிறுவனங்கள் முன்வந்துள்ளது. முதல் கட்ட போட்டியில் டாபர் மற்றும் பங்கு முதலீட்டு நிறுவனமான A91 கோப்பிடல் ஆர்வம் தெரிவித்தாலும் கடைசியில் வெளியேறியது.

 ஐடிசி மற்றும் நெஸ்லே

ஐடிசி மற்றும் நெஸ்லே

இந்நிலையில் வேமாக வளர்ச்சி அடைந்து வரும் யோகா பார் நிறுவனத்தில் முதலீடு செய்ய நாட்டின் மிகப்பெரிய FMCG நிறுவனமான ஐடிசி மற்றும் நெஸ்லே ஆகியவை போட்டிப்போட்டு வருகிறது.

சீரியல் சி முதலீடு

சீரியல் சி முதலீடு

சுஹாசினி சம்பத் மற்றும் அனிந்திதா சம்பத் ஆகிய இரு பெண்கள் இணைந்து உருவாக்கிய யோகா பார் பிராண்ட் 2015ல் முதல் முறையாகப் பையர்சைட் வெனச்ர்ஸ் நிறுவனத்திடம் இருந்து முதலீட்டிடை திரட்டியது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2020 வரையில் சீரியல் சி வரையிலான முதலீட்டை திரட்டியது.

140-150 கோடி விற்பனை

140-150 கோடி விற்பனை

யோகா பார் 100% வளர்ச்சியடைந்து வருகிறது மற்றும் FY23 இல் ரூ 140-150 கோடி விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விற்பனை அளவை காட்டிலும் நிறுவனத்திற்கு 4 மடங்கு அதிக மதிப்பீட்டை எதிர்பார்க்கிறது. இதனால் இந்த மதிப்பீட்டை ஏற்பவர்கள் முதலீடு செய்வார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ITC, nestle competes to buy stake in Yoga Bar a bangalore health snack company

ITC, nestle competes to buy stake in Yoga Bar a bangalore health snack company

Story first published: Friday, September 23, 2022, 16:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.