பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. இனி, எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.. புதிய வசதி அறிமுகம்..!

எங்கிருந்தும், எந்நேரமும் இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வகையில் ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுவரை, நிலம் எங்கே இருக்கிறதோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுதான் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இனி, வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. எங்கிருந்தும், எந்நேரமும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு, செயலாக்கக் கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கட்டணம் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைக்கு விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும்.

பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உத்தரவின் நகல், பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இணையத்திலேயே கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடுமுறை நாட்களிலும் இந்த சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.