எச் வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சமீப நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது, இதனை உறுதிப்படுத்தும் விதமாக அஜித் லடாக்கிற்கு பைக் ட்ரிப் சென்ற புகைப்படங்களையும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், படத்தை வெளியிட முடியவில்லை. இன்னும் படப்பிடிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏகே 61 படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது .துணிவு என்று இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக அஜித் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தால் விஜய் ரசிகர்களும், விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தால் அஜித் ரசிகர்களும் இணையத்தில் மாறி மாறி சண்டையிடுவது வழக்கம். இணையத்தை தாண்டி மதுரையில் எப்பொழுதும் போஸ்டர்களின் சண்டையிடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டரை ஒட்டி உள்ளனர்.
“வாரிசா வந்து ஜெயிக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்ல… தனியா துணிவா வந்து ஜெயிக்கிறது தான் பெரிய விஷயம்” என்று வசனம் இடம் பெற்ற போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இது தற்போது மதுரை பகுதிகளில் இரு தரப்பு ரசிகர்களையும் சண்டையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படம் பொங்கல் தினத்தில் வெளியாகியுள்ள நிலையில், அஜித்தின் துணிவு படமும் அதே தேதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் படங்கள் ஒரே தினத்தில் வெளியானது.