வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரியாத்: சவுதி அரேபியாவின் மெதினா நகரில், பூமிக்கு அடியில் ஏராளமான தங்கம் மற்றும் தாமிரம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாடு கூறியுள்ளது.
இது தொடர்பாக சவுதி புவியியல் சர்வே அமைப்பு கூறுகையில், மெதினா பிராந்தியத்தில் அபா அல் ரஹா பகுதியில் தங்க படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே பிராந்தியத்தில் அல் மதீக் பகுதியில் நான் இடங்களில் தாமிர படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கண்டுபிடிப்பு மூலம், உலகிற்கு நம்பிக்கையான முதலீட்டிற்கான கூடுதல் வாய்ப்புகளை தருகிறோம் என கூறப்பட்டுள்ளது
தங்கம் மற்றும் தாமிரம் கண்டுபிடிப்பு மூலம், சவுதி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் 533 மில்லியன் டாலர் முதலீடு மற்றும் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement