கொச்சி: நாடு முழுவதும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வகுப்புவாதம் மற்றும் வன்முறையை’ கையாள்வதில் சகிப்பு தன்மை கூடாது என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று தமிழ்நாடு, கேரளா உள்பட 13 மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் பிஎஃப்ஐ, எஸ்டிபி கட்சிகளைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், நாட்டில் கலவரம், வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகவும் என்ஐஏ குற்றம் சாட்டி உள்ளது .
இது குறித்து பாரத் ஜோடோ யாத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி கூறியதாவது, ‘ மதவாதமும், வன்முறையும் எந்த வடிவில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது’, அது கண்டிக்கப்பட வேண்டும், அவற்றை எதிர்த்து நாம் போராட வேண்டும்.’ ‘வகுப்புவாதம் மற்றும் வன்முறையை’ கையாள்வதில் ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ இருக்க வேண்டும், “… அவர்கள் எங்கிருந்து வந்தாலும் சரி… (அனைத்தும்) ஒன்றுதான்…” என்று கடுமையாக கூறினார்.