உலக நாடுகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 10 நாடுகள் பணவீக்கத்தைக் குறைப்பதற்காகப் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இதன் வாயிலாக ஒட்டுமொத்த சர்வதேச சந்தையிலும் பங்குச்சந்தை முதலீடுகள் குறைந்து அதிகளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது. இதன் எதிரொலி தான் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவைப் பதிவு செய்துள்ளது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரையிலான சரிவை எதிர்கொண்டு உள்ளனர்.
உஷாரா இருங்க..காளையா கரடியா மோதலில் இந்திய பங்கு சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் ?
சென்செக்ஸ்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1020.80 புள்ளிகள் சரிந்து 58,098.92 புள்ளிகளை அடைந்துள்ளது. இன்று அதிகப்படியாகச் சென்செக்ஸ் 57,981.95 புள்ளிகளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாப் 30 நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, டாடா ஸ்டீல், ஐடிசி ஆகியவை மட்டுமே உயர்வுடன் உள்ளது மற்ற 27 நிறுவனங்களும் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 3 சதவீதமும், பவர் கிரிட் 7.93 சதவீதமும் சரிவடைந்துள்ளது.
ஐடிசி நிறுவனம்
இதில் ஐடிசி நிறுவனம் பெங்களூரில் இருக்கும் யோகா பார் பிராண்ட்-ல் சுமார் 150 கோடி ரூபாய் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் வெற்றிபெற்றால் வருடம் 150 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் பங்குகளைப் பெற முடியும்.
டாடா குழுமம்
டாடா குழுமம் தனது 7 உலோகம் சார்ந்த நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இதன் படி டாடா ஸ்டீல் லாங் ப்ராடெக்ட்ஸ், டாடா மெட்டாலிங்க்ஸ், டின்பிளேட் கம்பென் ஆப் இந்தியா, TRF, இந்தியன் ஸ்டீல் & வயர் ப்ராடெக்ட்ஸ், டாடா ஸ்டீல் மைனிங், S&T மைனிங் ஆகிய 7 நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீடு 302.45 புள்ளிகள் சரிந்து 17,327.35 புள்ளிகளை அடைந்துள்ளது, அதிகப்படியாக 17,291.65 புள்ளிகளை எட்டியது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி வங்கி, நிதியியல் சேவைகள், மீடியா, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது.
பென்ச்மார்க் வட்டி
கடந்த 2 நாட்களில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய நாடுகள் இதுதான். அமெரிக்கா – 0.75 சதவீதம், தென்னாப்பிரிக்கா – 0.75 சதவீதம், ஐக்கிய அரபு நாடுகள் – 0.75 சதவீதம், சவுதி அரேபியா – 0.75 சதவீதம், ஹாங்காங் – 0.75 சதவீதம், பிலிப்பைன்ஸ் – 0.50 சதவீதம், இந்தோனேசியா – 0.50 சதவீதம், சுவிட்சர்லாந்து – 0.75 சதவீதம், நார்வே – 0.50 சதவீதம், தைவான் – 0.12.5 சதவீதம்.
Sensex fall 1020 points; Stock market Investors loses by Rs 5 lakh crore
Sensex fall 1020 points; Stock market Investors loses by Rs 5 lakh crore