இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ஜியோ மற்றும் வோடோபோன் ஆகிய போட்டி நிறுவனங்கள் மத்தியில் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது புதிய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி இலவச டேட்டா வழங்க இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
5 மடங்கு லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்தி ஏர்டெல்..!
ஏர்டெல் புதிய சலுகை
இந்தியாவில் அதிக சந்தாதாரர்களை ஈர்க்கும் வகையில் ஏர்டெல் புதிய டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ அல்லது வோடபோன் ஐடியா போன்ற அதன் போட்டியாளர்களை சமாளிக்கும் முயற்சியில், ஏர்டெல் நிறுவனம் தனது புதிய சந்தாதாரர்களுக்கு 5 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.
புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
இந்த சலுகை அனைத்து ஏர்டெல் சந்தாதாரர்களுக்கும் கிடைக்காது என்பதும், புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் இணைப்பை வாங்குபவர்களுக்கு மட்டுமே இலவச டேட்டா கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தேங்க்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து, ஏர்டெல் நிறுவனத்தின் சிம் வாங்கினால் இந்த சலுகை கிடைக்கும். ஆனால் முழு டேட்டா பலனும் ஒரே நேரத்தில் கிடைக்காது. ஏர்டெல் புதிய சிம் வாங்கியவுடன் 1 ஜிபி டேட்டாவின் 5 கூப்பன்கள் கிடைக்கும். இந்த கூப்பன்களை 90 நாட்களுக்குள் புதிய வாடிக்கையாளர்கள் ஒவ்வொன்றாக பயன்படுத்தி கொள்ளலாம்.
பரிந்துரை திட்டம்
மேலும் ஏர்டெல் சிம்மை தங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு பரிந்துரை செய்தால் அதற்கும் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி ஏர்டெல் பயனர் ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம்மிற்கான பரிந்துரை இணைப்பை நண்பருக்கு அனுப்ப வேண்டும். அடுத்த கட்டத்தில், அந்த நண்பர் புதிய ப்ரீபெய்டு சிம் இணைப்பைக் கிளிக் செய்து புதிய ஏர்டெல் ப்ரீபெய்டு சிம் கார்டை ஆர்டர் செய்ய வேண்டும். இவ்வாறு நடந்தால் இரு பயனர்களுக்கும் ரூ.100 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும்.
2 ஜிபி டேட்டா சலுகை
மேலும் ஏர்டெல் நிறுவனம் தனியாக இலவச 2GB டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்டு பயனர் இலவச 2ஜிபி டேட்டா கூப்பன்களை பெற, 839, 719, 699, 549. 359 மற்றும் 265 ஆகிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு உங்கள் ஏர்டெல் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்து முடிந்ததும், இந்த 2 ஜிபி இலவச டேட்டா கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகையை இணையதளம் அல்லது பிற தளங்களை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வதன் மூலம் பெற முடியாது. ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.
Bharti Airtel giving 5GB free data for New Prepaid Users!
Bharti Airtel giving 5GB free data for New Prepaid Users! | 5 ஜிபி இலவச டேட்டா தரும் ஏர்டெல்.. யாருக்கெல்லாம் இது பொருந்தும்?