மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில் 90 பைசா சரிந்து, 80.86 ரூபாயாக வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டிருந்தது. இந்த நிலையில் இன்று எதிர்பார்த்ததை போலவே இன்றும் 81 ரூபாயினை தாண்டியுள்ளது.
இது தொடகத்திலேயே 81.03 ரூபாயாக தொடங்கிய நிலையில், இன்று இதுவரையில் அதிகபட்சமாக 81.13 ரூபாயினை எட்டியுள்ளது. கடந்த 8 அமர்வில் மட்டும் ரூபாயின் மதிப்பானது 2.51% சரிவினைக் கண்டுள்ளது. இதே இந்த ஆண்டில் இதுவரையில் 8.48% சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கு என்ன காரணம்? இனி ரூபாயின் மதிப்பு எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்புகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய காரணம்
அமெரிக்காவின் மத்திய வங்கியானது எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது மேற்கொண்டு வரவிருக்கும் கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பானது மேற்கொண்டு சரியலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் பதற்றங்கள்
ஏற்கனவே ரஷ்யா – உக்ரை இடையேயான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது சீனா தாய்வான் இடையேயான பிரச்சனையும் புகைந்து கொண்டுள்ளது. இது மேற்கொண்டு சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கியும், பணவீக்கத்தினை 2% என்ற லெவலுக்கு கொண்டு வரும் வரையில் பின் வாங்காது என்றும் கூறியுள்ளது.
பங்கு சந்தைகள் சரிவு
இதற்கிடையில் டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. அமெரிக்காவின் பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இது சர்வதேச சந்தையில் உள்ள முதலீடுகள் வெளியேற வழிவகுத்துள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. இந்திய சந்தையிலும் செல்லிங் பிரஷர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு ரூபாயின் மதிப்பில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத சரிவு
இதற்கிடையில் தான் கடந்த அமர்வில் ரூபாயின் மதிப்பானது 80.27 ரூபாயாக தொடங்கியது. இன்ட்ராடேவில் அதன் ஆல் டைம் லோவாக 80.95 ரூபாயினை எட்டியது. இதன் முந்தைய அமர்வில் 79.96 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வருமா?
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரானது 7 மாதங்களை எட்டியுள்ள நிலையில், நாட்டில் அதிகளவிலான இராணு வீரர்களை திரட்டுவதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபரின் இந்த நடவடிக்கையால், மேற்கொண்டு போர் இப்போதைக்கு முடிவுக்கு வருமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது மேற்கொண்டு பணவீக்கம், பொருளாதாரம் என அனைத்திலும் நிச்சயமற்ற நிலையையே ஏற்படுத்தலாம்.
எதிர்பார்ப்பு
இதற்கிடையில் நிபுணர்கள் ரூபாயின் மதிப்பானது மேற்கொண்டு 81.25 – மற்றும் 81.40 ரூபாயினை தொடலாம் என கணித்துள்ளனர். கடந்த அமர்வின் உச்சட்தினை உடைக்கும்பட்சத்தில் மேற்கோண்டு வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
indian rupee crashing above 81 against dollar
indian rupee crashing above 81 against dollar /81-ஐ தாண்டிய ரூபாய் மதிப்பு.. இனி எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்?