Sensex 750 புள்ளிகள் சரிவு. வங்கி, ஐடி பங்குகள் அதிகப்படியான பாதிப்பு..!

அமெரிக்கப் பெடரல் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி வட்டி விகிதத்தை அதிகரித்த நாளில் இருந்து பங்குச்சந்தையும், ரூபாய் மதிப்பும் மோசமான சரிவை எதிர்கொண்டு வருகிறது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தகத்தின் எதிரொலியாக 750 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது.

இந்தச் சரிவுக்கு முக்கியமான காரணம் அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை தான்.

டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

வட்டி விகிதம்

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரித்துள்ள காரணத்தால் அந்நாட்டு பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்துவரும் வேளையில் பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் சரிந்து வருகிறது. இது முதலீட்டளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் சர்வதேச சந்தை பாதிப்பால் இந்திய சந்தையும் பாதிப்படைந்து உள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர் சரிவை பதிவு செய்து வருகிறது. 12.30 மணியளவில் சென்செக்ஸ் 750 புள்ளிகள் வரையில் சரிந்து 58,345.91 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 17,413.50 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள்
 

முக்கிய நிறுவனங்கள்

தற்போது மும்பை பங்குச்சந்தையில் சன் பார்மா, டாடா ஸ்டீல், ஐடிசி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமெண்ட், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபமாக உள்ளது. பவர் கிரிட் நிறுவன பங்குகள் சுமார் 4.93 சதவீதம் சரிந்துள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

வெள்ளிக்கிழமை நாணய சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 81 ரூபாய் அளவீட்டை கடந்தது முதல் முறையாகப் புதிய வரலாற்றுச் சாதனை குறைந்துள்ளது. இதேவேளையில் அமெரிக்கக் கருவூல வருவாய் அதிகரித்துள்ளது, 10 ஆண்டுப் பத்திர முதலீட்டு லாபம் 6 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து இரண்டு மாத உயர்வை எட்டியது.

81.26 வரலாற்றுச் சரிவு

81.26 வரலாற்றுச் சரிவு

இந்திய ரூபாய் மதிப்பு இன்று ஒரு டாலருக்கு 81.03 ஆகத் துவங்கியது மற்றும் 81.26 என்ற வரலாறு காணாத அளவை தொட்டது. இது நேற்றைய வர்த்தக முடிவான 80.87 ஐ விட 0.33% குறைவானதாகும். கடந்த 8 நாளில் 7 நாள் ரூபாய் மதிப்பு சரிந்து மொத்தம் 2.51 சதவீதத்திற்கு மேல் இழப்பை எதிர்கொண்டது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

இரண்டு நாட்களில் வட்டி விகிதத்தை உயர்த்திய நாடுகள்:

அமெரிக்கா – 0.75 சதவீதம்
தென்னாப்பிரிக்கா – 0.75 சதவீதம்
ஐக்கிய அரபு நாடுகள் – 0.75 சதவீதம்
சவுதி அரேபியா – 0.75 சதவீதம்
ஹாங்காங் – 0.75 சதவீதம்
பிலிப்பைன்ஸ் – 0.50 சதவீதம்
இந்தோனேசியா – 0.50 சதவீதம்
சுவிட்சர்லாந்து – 0.75 சதவீதம்
நார்வே – 0.50 சதவீதம்
தைவான் – 0.12.5 சதவீதம்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex fall upto 750 points today, Rupee fall 81.26 Against USD dollar

Sensex fall upto 750 points today, Rupee fall 81.26 Against USD dollar

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.