இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இதேவேளையில் அனைத்து வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களும் தனது வர்த்தகத்தையும் ஊழியர்களையும் மறுசீரமைப்புச் செய்வதில் குறியாய் உள்ளது.
உலகளவில் பொருளாதார மந்தநிலை எட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் இத்தகைய மறுசீரமைப்பு மூலம் செலவுகள் குறைப்பது மட்டும் அல்லாமல் வர்த்தகம் மற்றும் நிர்வாகம் பெரிய அளவில் மேம்படும்.
இந்த நிலையில் டாடா குழுமம் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
7 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. டாடா தான் காரணமா..?
மறுசீரமைப்பு
கூகுள் முதல் இன்போசிஸ் வரையில் தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் இருப்பதை விரும்பாமல் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கும் பிரிவுகளுக்கு மாற்றி வருகிறது. நஷ்டம் அளிக்கும் அல்லது அதிக வருவாய் அளிக்காத வர்த்தகப் பிரிவுகளையோ அல்லது தேவைகளையோ மூடி வருகிறது, இதற்குப் பேஸ்புக், ஓலா ஆகியவை உதாரணம்.
டாடா குழுமம்
ஆனால் டாடா குழுமம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவோ அல்லது வர்த்தகத்தை மூடவோ செய்யாமல், பிரிந்து கிடைக்கும் வர்த்தகத்தை ஒன்றாகச் சேர்ந்து மெகா நிறுவனமாக மாற்றுகிறார் சந்திரசேகரன்.
டாடா ஸ்டீல்
டாடா சன்ஸ்-ன் சேர்மன் ஆக 2வது முறை பதவியேற்றிய நாளில் இருந்து சந்திரசேகரன் டாடா மோட்டார்ஸ் வளர்ச்சிக்கான பாதையைச் சரி செய்து வந்த நிலையில் தற்போது, அவருடைய கவனத்தை டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மீது திருப்பியுள்ளார். இது டாடா ஸ்டீல் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
கட்டுமான துறை
இந்தியாவில் கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதிகப்படியான வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
7 உலோக நிறுவனங்களை
டாடா குழுமம் தனது உலோக வர்த்தகத்தில் செலவுகளைக் குறைக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் டாடா குழுமத்தில் இருக்கும் 7 உலோகம் சார்ந்த நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
இணைப்பு
இதன் படி டாடா ஸ்டீல் லாங் ப்ராடெக்ட்ஸ், டாடா மெட்டாலிங்க்ஸ், டின்பிளேட் கம்பென் ஆப் இந்தியா, TRF, இந்தியன் ஸ்டீல் & வயர் ப்ராடெக்ட்ஸ், டாடா ஸ்டீல் மைனிங், S&T மைனிங் ஆகிய 7 நிறுவனங்களை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இணைக்கப்பட உள்ளது.
பங்குகள் பங்கீடு
இந்த 7 நிறுவனங்களை இணைப்பு மூலம் பங்கு தாரர்களுக்குப் பங்குகளை மாற்றி அளிக்கப்பட உள்ளது. அதாவது 10 TRF பங்குகளுக்கு 17 டாடா ஸ்டீல் பங்குகள், 10 TSPL பங்குகளுக்கு 67 டாடா ஸ்டீல் பங்குகள், 10 Tinplate பங்குகளுக்கு 33 டாடா ஸ்டீல் பங்குகள், 10 டாடா மெட்டாலிங்க்ஸ் பங்குகளுக்கு 79 டாடா ஸ்டீல் பங்குகள் அளிக்கப்பட உள்ளது.
டாடா குழுமம் நம்பிக்கை
இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய மதிப்பீட்டை வழங்குவது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என்பது டாடா குழுமத்தின் நம்பிக்கை. இந்த முடிவு நேற்று நடந்த பங்குதாரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, இன்று காலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TATA: 7 metal companies merger into Tata Steel; unlock the opportunity for shareholder
TATA Steel: 7 metal companies merger into Tata Steel; Chandrasekaran unlocking the opportunity for tata steel shareholders for very long term.