ஆயுதங்களாலும், விஷம் நிறைந்த பொய்களாலும் ரஷ்யா இரட்டைத் தாக்குதலை நடத்தி வருவதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மிக்கேல் விமர்சனம் செய்துள்ளார்.
ஐ.நா.பொதுசபையில் பேசிய அவர், கற்பனையான ஒரு எதிரிக்கு எதிராக உலகை ஒன்று திரட்ட ரஷ்யா முயற்சிப்பதாக சாடினார்.
உக்ரைன் உள்ளிட்ட எந்த ஒரு நாடும் ரஷ்யாவை மிரட்டவோ தாக்கவோ இல்லை என்றும், ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே ரஷ்யாவுடன் முரண்பட்டு இருப்பதை விரும்பவில்லை என்றும், நீண்ட காலமாக மேற்கத்திய நாடுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக ரஷ்யா கூறி வருவது முற்றிலும் தவறானது என்றும் சார்லஸ் மிக்கேல் தெரிவித்துள்ளார்.