இந்தியாவிற்கு \"ஆன்மீக அறிவியலும்\" தேவை.. இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் வலியுறுத்தல்!

மயிலாடுதுறை: இந்தியா விஞ்ஞான மற்றும் விண்வெளித்துறை மட்டுமில்லாது, பல்வேறு துறைகளிலும் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஆன்மீக அறிவியல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருக்கடையூர் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமன பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு, இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன், தனது குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

ஆயுஷ் ஹோம பூஜை

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு 66-வது வயது பூர்த்தியானதைத் தொடர்ந்து, திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில், தனது மனைவி மாலதியுடன் ஆயுஷ் ஹோம பூஜையில் பங்கேற்றார். முன்னதாக, கோ பூஜை, கஜ பூஜை செய்து, குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார். பின்னர், கோயில் உள்ள அமிர்தகடேஸ்வரர், விநாயகர், அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளுக்குச் சென்று தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தர்மபுரம் ஆதினத்துடன் சந்திப்பு

தர்மபுரம் ஆதினத்துடன் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதின மடத்திற்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சென்றார். மடத்தில், 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை, தனது மனைவியுடன் நேரில் சந்தித்து இஸ்ரோ சிவன் ஆசி பெற்றார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு, ஆதினம் சார்பில், நினைவு பரிசும், திருக்குறள் புத்தகமும் வழங்கப்பட்டது.

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், தர்மபுரம் ஆதீனம், நாட்டின் தொன்மையான மடமாகும். இது சைவத்துடன் தமிழையும் வளர்த்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நமது நாடு, விண்வெளி துறையில் மட்டுமல்லாது, அணுசக்தி துறை, வேளாண்துறை, ரசாயனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.

முதன்மை நாடாக இந்தியா

முதன்மை நாடாக இந்தியா

அனைத்துத் துறைகளிலும் நாடு நல்ல வளர்ச்சி கண்டு வருவதால், விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக உருமாறும். தற்போது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. 100 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி என்ற இலக்கை இந்தியா விரைவில் எட்டும் என்றும் சிவன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆன்மீக அறிவியல்

ஆன்மீக அறிவியல்

மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலையும், ஆன்மீகத்தையும் தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும், ஆன்மீகமும் வேறு வேறு துறைகள் என்றாலும், ஆன்மீக அறிவியல் குறித்து, மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.