நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே பல ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ரூ.5000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷ்னைடர் என்பவர் இது குறித்து கூறிய போது இந்தியாவில் 2025-ஆம் ஆண்டுக்குள் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் இந்தியாவில் நெஸ்லே நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாகும் என்றும் அதுமட்டுமின்றி படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
11 மாதம் ஆச்சு, இன்னும் லெட்டர் வரல.. விப்ரோ செயலால் ஐடி ஊழியர்கள் கடுப்பு..!
நெஸ்லே நிறுவனம்
நெஸ்லே நிறுவனம் ஏற்கனவே பல ஆயிரம் கோடி முதலீடு செய்து கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க, ஆராய்ச்சி மையங்களை அமைக்க 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதலீடு
ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றும் இந்தியாவில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் உணவு மற்றும் பானங்களுக்கு அதிக செலவு செய்ய வாய்ப்பு இருப்பதால் புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் மார்க் ஷ்னைடர் தெரிவித்துள்ளார்.
சரியான நேரம்
மக்களின் செலவினங்கள் அதிகரிக்கும் போது அதற்கான சந்தையை விரிவு செய்வதுதான் சரியான செயல் என்றும் இந்தியாவில் ஆலை அமைப்பது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கு இதுதான் சரியான நேரம் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
விரிவுபடுத்த திட்டம்
இந்தியாவில் ஏற்கனவே நெஸ்லே 96 ஆலைகளை இயக்கி வருகிறது என்பதும் இந்த ஆலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விரிவுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அதற்காக 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும் நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் கடந்த 110 ஆண்டுகளாக இயங்கி வரும் நெஸ்லே நிறுவனம் புதிய முதலீடு செய்ய இருப்பதை அடுத்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் கூறப்படுகிறது.
குஜராத்தில் தொழிற்சாலை
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு குஜராத்தில் 2600 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க இருப்பதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நெஸ்லே இந்தியா
இந்த நிலையில் நெஸ்லே நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ் நாராயணன் அவர்கள் இது குறித்து கூறிய போது இந்தியாவில் வணிகத்தை விரிவுபடுத்த கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை அமைத்து வைத்திருப்பதாகவும் கூறினார்.நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் நிலையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது என்றும் அதற்கான செயல்பாட்டில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Nestle CEO Mark Schneider says to invest Rs 5,000 crore in India till 2025
Nestle CEO Mark Schneider says to invest Rs 5,000 crore in India till 2025 | இந்தியாவில் மிகப்பெரிய முதலீடு செய்யும் நெஸ்லே.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?