இந்தியாவில் 5 ஜி சேவை: அக்.1இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அன்று இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார். 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன.
பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கு முழுமுயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது. வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

image
இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “குறுகிய காலத்தில் நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை 80 சதவீத விரிவுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 5ஜி சேவையின் பயணம் மிகவும் உற்சாகமாக இருக்கும். மேலும் பல நாடுகள் 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை விரிவுப்படுத்த பல வருடங்கள் எடுத்துக் கொண்டன. ஆனால், நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.

5ஜி தொழில்நுட்பம், இந்தியாவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 2023 மற்றும் 2040க்கு இடையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு  36.4 டிரில்லியன் டாலர்கள் ($455 பில்லியன்) பயன் அளிக்கும் என மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழில்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த இணைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 5ஜி சேவையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி இன் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகக் குறையும் என்றும் மொபைல் தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஓயாத வைரஸ் தொல்லை; சீனாவை ஒத்த ரஷ்ய வைரஸ்.. வேக்சினால் எந்த பயனும் இல்லை.. எச்சரிக்கை!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.