ஹாலிவுட்
திரையுலகில்
மிகப்பெரிய
வீச்சை
ஏற்படுத்திய
ஜேம்ஸ்
கேமரூனின்
அவ்தார்
படம்
மீண்டும்
திரைக்கு
வந்துள்ளது.
செப்
23
அன்று
அவ்தார்
படம்
ஹைமேக்ஸ்
மற்றும்
3
டி
தொழில்
நுட்பத்தில்
மீண்டும்
வெளியாகியுள்ளது.
தியேட்டரில்
கடந்த
முறை
பார்க்காதவர்கள்
பார்க்கலாம்.
புதிய
தொழில்
நுட்பத்தில்
வந்துள்ள
அவ்தார்
படம்
அனைத்து
தியேட்டர்களிலும்
வெளியாகியுள்ளது.
இதை
முன்னர்
சாதாரணமாக
பார்த்தவர்கள்
தற்போது
உயரிய
தொழி
நுட்பத்தில்
பார்த்து
ரசிக்கலாம்.
ஹாலிவுட்
ஜாம்பவான்கள்
ஸ்பீல்பர்க்,
ஜேம்ஸ்
கேமரூன்
ஹாலிவுட்
திரைப்படங்களில்
சாதனை
படைத்த
திரைப்படங்களை
வரிசைப்படுத்தினால்
அதில்
ஸ்பீல்பர்க்,
ஜேம்ஸ்
கேமரூன்
படங்கள்
வரிசைக்கட்டி
நிற்கும்.
ஸ்பீல்பர்குக்கு
ஜாஸ்
படம்
பெரிய
அளவில்
பெயர்
வாங்கி
கொடுத்தது.
பின்னர்
ரெய்டர்ஸ்
ஆஃப்
தி
லாஸ்ட்
ஆர்க்,
ஈடி,
ஜுராஸ்ஸிக்
பார்க்
என
ஒருபக்கம்
கலக்க
அவரைப்போலவே
பிரம்மாண்ட
இயக்குநர்
ஜேம்ஸ்
கேமரூன்
இன்னொரு
பக்கம்
கலக்க
ஆரம்பித்தார்.
பிரம்மாண்ட
இயக்குநர்
ஜேம்ஸ்
கேமரூன்
ஸ்பீல்பர்க்கைப்போலவே
ஜேம்ஸ்
கேமரூனும்
லட்சக்கணக்கான
டாலர்களை
வாரி
இறைத்து
பிரம்மாண்ட
படங்களை
கொடுப்பதில்
வல்லவர்.
ஜேம்ஸ்
கேமரூன்
என்ன
செய்யப்போகிறார்,
எப்படி
யோசிப்பார்
என்பதே
யாருக்கும்
தெரியாது.
ஜேம்ஸ்
கேமரூன்
முதலில்
புகழ்
பெற்றதே
அர்னால்டை
வைத்து
எடுத்த
டெர்மினேட்டர்
படம்
தான்.
அதன்
பின்னர்
ராம்போ
2
படத்தை
இயக்கினார்.
1997
ஆம்
ஆண்டு
அவர்
எடுத்த
டைட்டானிக்
திரைப்படம்
திரைப்பட
வரலாற்றிலேயே
சாதனைப்படைத்தது.
அவ்தார்
அதன்
பின்னர்
கேமரூன்
எடுத்த
பிரம்மாண்ட
படம்
தான்
அவ்தார்.
இதன்
மொத்த
தயாரிப்புச்
செலவு
1500
கோடி
ரூபாய்.
இந்தப்படம்
மிகவும்
வித்தியாசமான
படம்.
தனி
உலகத்தில்
வாழும்
அவ்தார்களை
கண்காணிக்க
அனுப்பப்படும்
ஹீரோ
அவர்கள்
இடத்தை
ஆக்கிரமிப்பதை
எதிர்த்து
அவதார்களுடன்
சேர்ந்து
வெல்வதே
கதை.
இது
இதற்குமுன்
வெளியான
டைட்டானிக்
பட
சாதனையையே
முறியடித்தது.
சாதாரணமாக
வெளியான
இப்படத்தை
தியேட்டரில்
பார்த்தவர்கள்
பிரமித்தார்கள்.
இதன்
இரண்டாம்
பாகம்
தற்போது
தயாராகி
வருகிறது.
ஐமேக்ஸ்,
3
டி
தொழில்
நுட்பத்தில்
அவ்தார்
அவ்தார்
படத்தின்
இரண்டாம்
பாகத்தை
ஆவலுடன்
ரசிகர்கள்
எதிர்பார்க்கையில்
டிசம்பர்
மாதத்தில்
அவ்தார்
2
வெளியாகிறது.
இந்நிலையில்
அவ்தார்
முதல்
பாகம்
மீண்டும்
தியேட்டரில்
வராதா
என
ஏங்கியவர்களுக்கு
அரிய
வாய்ப்பாக
அவ்தார்
திரையரங்கில்
மீண்டும்
வெளியாகியுள்ளது.
அதுவும்
3
டி
மற்றும்
ஐமேக்ஸ்
தொழில்
நுட்பத்தில்
என்றால்
நம்ப
முடிகிறதா?
அப்படி
ஒரு
வாய்ப்பு
கிடைத்துள்ளது.
செப்
23
முதல்
திரையரங்குகளில்
வெளியாகியுள்ளது.
மிஸ்
பண்ணாம
பார்த்துடுங்க.