கள்ளக்குறிச்சி பள்ளியில் பீதியை கிளப்பிய ‛கருஞ்சீரகம்’ .. வெடிபொருள் என பரவிய தகவலால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருஞ்சீரகத்தை பார்த்து வெடிமருந்து என போட்டோக்கள் வெளியான நிலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையானது.

கைது நடவடிக்கை

பள்ளிக்குள் நுழைந்தவர்கள் வாகனங்களை அடித்து நொறுங்கி தீவைத்தனர். மேலும் சான்றிழழ்களை சூறையாடினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரித்து கலவரம் தொடர்பாக ஏராளமானவர்களை கைது செய்தனர். மேலும் மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

புனரமைப்பு பணி

புனரமைப்பு பணி

இருப்பினும் கலவரம் நடந்த பிறகு பள்ளி பூட்டப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே பள்ளியை புனரமைக்க பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகியது. இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் உரிய முடிவு எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மாவட்ட கலெ க்டர் ஷர்வன் குமார் கூறியதன் அடிப்படையில் சேதமடைந்த பள்ளி சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

 வெடிமருந்து இருப்பதாக தகவல்

வெடிமருந்து இருப்பதாக தகவல்

இந்நிலையில் தான் இன்று பள்ளி தொடர்பாக ஒரு விஷயம் பரவியது. அதாவது பள்ளியில் புனரமைப்பு பணி இருந்தபோது வெடிமருந்து சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. பள்ளியில் வெடிமருந்து இருப்பதாக வெளியான தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் மீண்டும் கனியாமூர் பள்ளி மீது கவனம் திரும்பியது. இதுதொடர்பாக போலீசார் விசாரிக்க தொடங்கினர்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இதுபற்றி விசாரித்த நிலையில் தான் பள்ளியில் வெடிமருந்து இல்லை என்பதும், கருஞ்சீரகத்தை பார்த்து வெடிமருந்து என தகவல் வெளியானதும் தெரியவந்ததது. அதாவது புனரமைப்பு பணியின்போது விடுதி சமையலறை பகுதியில் கருஞ்சீரகம் பொட்டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டவர்கள் பள்ளி நிர்வாகத்தில் இருந்த சிலரிடம் தெரிவித்தபோது, அதன் உண்மை நிலையை தெரியாமல் வெடிமருந்து எனக்கூறி போட்டோ எடுத்து தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பானதை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உடனடியாக கணியமூர் பள்ளிக்கு வந்து ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது கண்டெடுக்கப்பட்ட அந்த பொருள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருஞ்சீரகம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.