ரேவா: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக எம்.பி. ஒருவர் கழிவறையை வெறுங்கைகளால் சுத்தம் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. இவர் அண்மையில் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் மரம் நடும் விழாவிற்குச் சென்றார். கட்கரி பெண்கள் பள்ளி என்ற அந்தப் பள்ளியின் கழிவறைகளையும் அவர் சோதனை செய்தார். அப்போது கழிவறைகள் மிகவும் அசுத்தமாக இருந்ததைப் பார்த்த அவர் வெறுங்கைகளாலேயே அதனை சுத்தம் செய்தார்.
பாஜக இளைஞரணியானது கடந்த செப்டம்பர் 17 பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் வரை மத்தியப் பிரதேசம் முழுவதும் தூய்மைப் பணியை முன்னெடுத்துள்ளது. அதேபோல் மரம் நடுவிழாக்களையும் ஒருங்கிணைக்கிறது. அதன்படியே, ஜனார்த்தன் மிஸ்ரா எம்.பி. இந்தப் பள்ளிக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் கழிவறை அசுத்தமாக இருப்பதைக் கண்டு அதனை சுத்தம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 அக்டோபர் 2ஆம் தேதியன்று ஸ்வச் பாரத் என்ற தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்தார். அந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் கிராமப்புற பகுதிகளில் 100 மில்லியன் கழிவறைகள் கட்டப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோவை எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்குக் கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
पार्टी द्वारा चलाये जा रहे सेवा पखवाड़ा के तहत युवा मोर्चा के द्वारा बालिका विद्यालय खटखरी में वृक्षारोपण कार्यक्रम के उपरांत विद्यालय के शौचालय की सफाई की।@narendramodi @JPNadda @blsanthosh @ChouhanShivraj @vdsharmabjp @HitanandSharma pic.twitter.com/138VDOT0n0
— Janardan Mishra (@Janardan_BJP) September 22, 2022