உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக விளங்கும் சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டதாகவும், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், ராணுவம் ஆட்சியையும் நாட்டையும் கைப்பற்றியுள்ளதாகவும் சமூகவலைத்தளத்தில் டிவீட் பரந்து வருகிறது.
ஜி ஜின்பிங் கைது என்பது சீனாவுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கும் மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்பது தான் உண்மை.
பாகிஸ்தான்-ஐ எச்சரிக்கும் ரஷ்யா.. எதற்காக..?
ஜி ஜின்பிங்
சீன இராணுவ ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும். உஸ்பெக்கிஸ்தான் SCO மாநாடு முடிந்த பின்பு சீன திரும்பிய ஜின் ஜின்பிங்-ஐ அந்நாட்டு ராணுவம் கைது செய்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
சீன மக்கள் விடுதலை இராணுவம்
சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஜென்ரல் லீ கியாமிங் (Li Qiaoming) உத்தரவின் பேரில் ராணுவ சிறப்புப் படைகள் ஷென்யாங் ராணுவ விமான நிலையத்தில் குவிந்துள்ளன. இதே மட்டும் அல்லாமல் சீன மக்கள் விடுதலை இராணுத்தின் இராணுவ வாகனங்கள் பெய்ஜிங்-ஐ நோக்கி செப்டம்பர் 22 முதல் படையெடுக்கத் துவங்கியதாக வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது.
80 கிலோமீட்டர்
இந்த ராணுவ வாகனங்கள் பெய்ஜிங் நகரத்தின் அருகில் இருக்கும் Huanlai முதல் Zhangjiakou வரையில் சுமார் 80 கிலோமீட்டருக்கு வரிசை கட்டி நிற்கிறது. இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த மற்றும் உயர் அதிகாரிகள் ஜி ஜின்பிங்-ஐ சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
வாழ்நாள் சிறை தண்டனை
இதேபோல் வெள்ளிக்கிழமை மட்டும் ஜி ஜின்பிங்-க்கு எதிரான 3 கம்யூனிஸ்ட் உயர் அதிகாரிகளுக்கு அவசர அவசரமாக வாழ்நாள் சிறை தண்டனையும், மேலும் 3 பேருக்கு நீண்ட காலச் சிறை தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரையில் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதற்கான உறுதியான தகவல் வெளியாகவில்லை.
How China will affect if Xi jinping arrested and army took control After Military Coup?
How China will affect if Xi jinping is arrested and army took control After Military Coup?