ராஞ்சி, :’ஜார்க்கண்டில், கடந்த 32 மாதங்களில் 1,131 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ‘கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கடந்த ஆகஸ்ட் வரையிலான 32 மாதங்களில், 27 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுஉள்ளனர்; 1,131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களில் நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.இக்கூட்டத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் பேசியதாவது:நக்சல் ஆக்கிரமிப்பு நிறைந்த கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் கிராம மக்களை சென்றடைய வேண்டும்.
பாதுகாப்புப் படையினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கிராம மக்களிடமிருந்தே வாங்கினால்தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில குற்றவாளிகள், வெளியில் குற்றச் செயல்களை துாண்டி விடுவதாக ஏராளமான புகார்கள்வருகின்றன. எனவே, சிறைகளில் மொபைல் போன் ‘ஜாமர்’ கருவிகளை பொருத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement