இலங்கை பத்திரிகையாளர் பேரவையினால் நடத்தப்பட்ட ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் – டிப்ளோமா பாடநெறியின் 8ஆம் குழுவுக்கும் பத்திரிகை துறை தொடர்பான சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22) ராஜகிரியவில் இடம்பெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன கலந்து கொண்டார்.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்….
பத்திரிகை ஆசிரியர்களான மார்ட்டின் விக்கிரமசிங்க , சந்திரரத்ன மானவசிங்கன், மீமன பிரேமதிலக, டி.பி.தனபால ஆகியோர் எமது நாட்டின் கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்படும் வகையில் உயர் விழுமியங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கு சிறந்த சமூகப் பார்வையுடன் ஊடகங்களை வழிநடத்தினார்கள்.
ஆனால் கடந்த சில தசாப்தங்களில் கலாச்சார, தார்மீக மற்றும் மனிதாபிமானம் என்பன சீர்குழைந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய நிகழ்ச்சி நிரல் எதுவுமின்றி தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை அடிப்படையாகக் கொண்டு வெறுப்புடன் ஊடகங்களை கையாளுவதால் நமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
ஊடகம் தொடர்பான கதையை உள்ளடக்கி நாங்கள் தயாரித்த ‘த நியூஸ் பேப்பர்’ திரைப்படம் ரஷ்யாவில் நடந்த கசான் திரைப்பட விழாவில் முன்வைக்கப்பட்டது. அங்கு சென்ற சந்தர்ப்பத்தில் உலகெங்கிலும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உட்பட பல்வேறு அறிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பெரும்பாலானோர் இந் நாட்டிற்கு வருவதைப் பற்றி, பயத்துடனும் சந்தேகத்துடனும் இருக்கின்றனர்.
எனவே, இவ்வுலகில் குறுகிய காலம் வாழ்ந்து இறந்தாலும், எதிர்கால தலைமுறைக்காக தாய்நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் தமது பேனாக்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நாட்டின் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் மிக முக்கியமான ஊடக இலக்கு, உங்கள் ஊடக நிறுவனத்தை நீங்கள் சிந்திப்பதுடன் நீங்கள் செவிமடுக்கும் விடயங்களை நியாயமான முறையில் ஆக்கபூர்வமாக அறிவொளி விடயங்களாக சமூகத்தின் முன்வைக்க வேண்டும்.
முதலாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் அழிக்கப்பட்ட பின்னர், ஜப்பானிய குழந்தைகளுக்கு ஊடகங்கள் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளினூடாக முதலாவது கற்பித்த பாடம் ‘அன்பு’ அதாவது, தனது குடும்பத்தார் மற்றும் மற்றவர்க நேசிக்கவும். தாவரங்கள் மற்றும் விலங்குகள் உட்பட சூழலை நேசிக்கவும். தாய்நாட்டை நேசிக்கவும் கற்றுக்கொடுத்தனர். எனவே, இன்றும் ஜப்பானியர்கள் அந்நியரைச் சந்தித்தாலும் தலை குனிந்து மரியாதை செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
இன்று டிப்ளோமா சான்றிதழைப் பெறும் நீங்கள் அனைவரும் உங்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி நாட்டைப் பெருமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த வைபவத்திற்கு ஊடக அமைச்சின் செயலாளர், இலங்கை செய்தியாளர் சபையின் அதிகாரிகள், பல்கலைக்கழக உபவேந்தர்கள் கலந்துகொண்டனர்.