நாங்கள் களத்துக்கு வந்தா என்ன ஆகும்? – அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசிய போது, இரண்டு நாட்களுக்கும் முன்பு என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை, பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களிடத்தில் சோதனையை நடத்தினர். இந்தியா முழுவதும் 105 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையில் தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த இரு நாட்களாக பாஜக தொண்டர்கள் மீது, சொத்துகள் மீது, அலுவலகம் மீது பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கோவையில் 12 இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 1 இடத்தில், செங்கல்பட்டு 1 இடத்தில் என தமிழகம் முழுவதும் 19 இடத்தில், ஆர் எஸ்.எஸ். இந்து முண்ணனி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.

காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. முதல்வர் அமைதி பூங்கா என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து கொண்டு நம் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் அவர்கள் களத்திற்கு வந்தால் என்ன ஆகும்? இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி. மாநில டிஜிபியை சந்தித்து பாதுகாப்பு கோரி மனு அளித்து கேட்டிருக்கிறோம். அமித்ஷாக்கு கூட கடிதம் எழுதியிருக்றேன். பிரிவினை வாதிகளை அடக்க வேண்டும்

காவல்துறை திமுக எம்.பி. அ.ராசா பேசியதற்கு போராட்டம் நடத்திய 100 பாஜக தொண்டர்களை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் 19 இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஒருவரை கூட கைது செய்யவில்லை என்று விமர்சித்தார்.

தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்தால் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். மூன்று நாட்களாக ஒரு கண்டன அறிக்கை கிடையாது. திமுக ஆட்சி ஒரு தலை பட்சமாக செல்கிறது. அமைதியின் முறையில் சென்று கொண்டிருக்கிறோம். 26ம் தேதி மாபெரும் அறப்போராட்டம் கோவையில் நடைபெறும் என அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.