ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிலக்கரி பெறுகையை மின்சக்தி எரிசக்தி அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரவையினால் நேற்று (22) இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட வழங்குநர்கள் இந்த பெறுகையை முன்னெடுக்க முடியாது என்று அமைச்சுக்கு அறிவித்துள்ளனர் என்றும் அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட தலையீடு மற்றும் கொடுப்பனவு தொடர்பில் அவநம்பிக்கை காரணமாக தமது நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் அமைச்சினால் நீண்ட காலத்திற்கு நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்காக புதிய பெறுகைக்கான அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலக்கரி நெருக்கடியை தவிர்ப்பதற்காக கடந்த வருடத்தில் வெளியிடப்பட்ட பெறுகைக்கு அமைவாக கிடைக்கவுள்ள நிலக்கரியை விரைவாக கொண்டு வருவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.