புதுடில்லி, :’பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ என்ற பொது துறை நிறுவனத்தின் புதிய நிதி இயக்குனராக ஜி.ரவிசங்கர் பதவி ஏற்றுஉள்ளார்.பவர்கிரிட் கார்ப்பரேஷனின் நிதி இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ரவிசங்கர், சென்னை பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையில் கணிதம் பயின்றவர். இதற்கு முன், இந்நிறுவனத்தின் செயல் இயக்குனராக இருந்தார். தற்போது, புதிய இயக்குனராக பதவி ஏற்றுள்ள இவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவு, சார்பு நிலையங்கள், மண்டல தலைமையகம் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துஉள்ளார். இந்நிறுவனத்தில் 32 ஆண்டு கால நீண்ட அனுபவம் உள்ள ரவிசங்கர், தேசிய மேலாண்மை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். மேலும், உலகளாவிய மேலாண்மை போட்டிக்காக, இந்தியா சார்பாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.
புதுடில்லி, :’பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ என்ற பொது துறை நிறுவனத்தின் புதிய நிதி இயக்குனராக ஜி.ரவிசங்கர் பதவி ஏற்றுஉள்ளார்.பவர்கிரிட் கார்ப்பரேஷனின் நிதி இயக்குனராக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்