பீஜிங்: பாத்ரூமில் கேமிரா வைத்து ஊழியர்களை கண்காணித்துள்ளார் ஒரு முதலாளி.. அவருக்குதான் இணையவாசிகள் டோஸ் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்..!
சபலபேர்வழிகள் நிறைய பேர், பாத்ரூமில் கேமரா வைத்து சிக்கி கொள்வது வழக்கம்.. தனிநபர் கழிவறை என்றாலும்சரி, பொது கழிப்பிடங்கள் என்றாலும் சரி, இந்த சபலிஸ்ட்களுக்கு இடங்கள் முக்கியமில்லை..!
பெண்களை மறைந்திருந்து வீடியோ, போட்டோ எடுத்து, அதை வைத்து அந்த பெண்களுக்கு தொல்லை தருவது, பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
வாட்ச்சிங்
இதுஒருபக்கம் இருந்தாலும், ஊழியர்களை கண்காணிக்க, அனைத்து நிறுவனங்களிலும் சிசிடிவி கேமராவை பொருத்துவது என்பது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம்.. ஆனால், கொரோனா உச்சத்தில் இருந்தசமயம், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்துதான் வேலை பார்த்தார்கள்.. எனவே, இவர்களை கண்காணிக்க முடியாமல் போனாலும், பணிகள் தங்குதடையின்றி அனைத்து துறையிலும் நடந்து கொண்டுதான் இருந்தது.
ஆப்பிள், கூகுள்
இதில், டெலிபர்பாமென்ஸ் என்ற பிபிஓ நிறுவனம் மட்டும் வித்தியாசப்பட்டது.. இந்த நிறுவனம் ஆப்பிள், கூகுள், உபர் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்குப் பிபிஓ சேவைகளை அளித்து வருகிறது… இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அலுவலகத்தில் சுமார் 3.8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்… இதில், சுமார் 2.4 லட்சம் ஊழியர்கள் தொற்று காரணமாக கடந்த வருடம் வீட்டில் இருந்து பணியாற்றினார்கள்.. இந்த ஊழியர்களை அவர்கள் வீட்டிலிருந்து AI அதாவது செயற்கை நுண்ணறிவு கேமரா கொண்டு கண்காணிக்கபோவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
பாத்ரூம் சிகரெட்
ஆனால், இப்போது வேறு ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.. தென்கிழக்கு சீனாவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனம் அது.. அந்த நிறுவனத்தின் பாத்ரூமில் சிசிடிவியை பொருத்தியுள்ளார் அந்த கம்பெனி ஓனர்… அதாவது, அலுவலக இடைவேளையின்போது, தொலைபேசி பயன்பாடு மற்றும் புகைபிடிப்பதை அந்த ஓனர் இப்படி கேமராவை வைத்து கண்காணித்துள்ளார்.. அதில், 3 பேர் சிக்கி உள்ளார்களாம்.. அந்த 3 பேரும், பிரேக் நேரத்தில் பாத்ரூமில் சிகரெட் பிடித்து கொண்டிருந்தார்களாம்.. மேலும் பாத்ரூமில் தங்கள் செல்போனை பயன்படுத்தி விட்டார்களாம். உடனே 3 பேரையும் வேலையில் இருந்து தூக்கி உள்ளார் அந்த முதலாளி.
சிகரெட்
ஆரம்பத்தில், கழிவறையில் கேமரா இருப்பது யாருக்குமே தெரியவில்லை.. போட்டோ வெளியாகி அதற்கு பிறகு உற்றுப்பார்த்தால்தான், கேமரா பொருத்திய விஷயமே தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, இவர்கள் சிகரெட் பிடிக்கும் போட்டோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டது அந்த நிறுவனம். இதுகுறித்து காரணம் கேட்டதற்கு, நிறுவனத்தின் கொள்கைகளை மீறுவது குறித்து மற்ற ஊழியர்களை எச்சரிக்க நிறுவனம் படங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
கமெண்ட்
எனினும், அந்த ஓனரை இணையவாசிகள் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.. இப்படி பொதுவெளியில் போட்டோவை வெளியிடுவது பிரைவைசியை பாதிப்பதாகும் என்றும், சீனாவில் “பிக் பிரதர்” கண்காணிப்புக்கு இன்னொரு உதாரணம் என்றும் கமெண்ட்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களை தவறாக பயன்படுத்தியதற்காக இந்த நிறுவனத்தை தண்டிக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு கொஞ்சமும் மரியாதை தராமல், மனிதநேயமும் இல்லாமல் விலங்குகளைப் போல நடத்துகிறார்கள் என்றும் அந்த முதலாளிக்கு எதிராக வசவுகள் பதிவாகி கொண்டிருக்கின்றன..