வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
மேலும், உ.பி.,யில் பதற்றம் நிறைந்த பகுதிகள் மற்றும் தனி நபர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்துள்ளது. கேரளாவில் கைது செய்யப்பட்ட பிஎப்ஐ உறுப்பினர் ஷபீக் பயீத்திடம் கைப்பற்றப்பட்ட குறிப்புகளில் கூறப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை 12ல் பிரதமர் மோடி பாட்னா வருகையின் போது தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி முகாம்களை இந்த அமைப்பு நடத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, பிஎப்ஐ அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் குறித்த விவரங்களை சேகரித்துள்ளதாகவும், பணம் பெரும்பாலும் ரொக்கமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
டில்லியில், பிஎப்ஐ அலுவலக பொறுப்பாளர்களான பெர்வேஷ் அகமது, இலியாஸ், அப்துல் முகீத் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement