புதுச்சேரி: பெண்ணை அடித்து கொலை செய்த கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது.
புதுச்சேரி, கோர்க்கோடு ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் சாந்தி,45; இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோர் 31ம் தேதி தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கடற்கரையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். அதில் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி பூபாலன்,50; சாந்தியை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், பூபாலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.மேலும், அவர் மீது புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், சாந்தியை கொலை செய்த பூபாலனுக்கு 10 ஆண்டு கடும் காவல் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜரானார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement