விலங்குகள் நலன் சார்ந்து இயங்கும் பீட்டா அமைப்பு தற்போது திடுக்கிடும் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு பெண்களை விட ஆண்கள் தான் காரணம் என்றும் அதுவும் இறைச்சியை அதிகம் உண்பதால் என்று பீட்டா அமைப்பின் ஜெர்மன் கிளையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், பெண்கள் இறைச்சி உண்ணும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்திற்கு இறைச்சி உண்பதும் ஒரு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
உணவு பழக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெண்களை விட ஆண்கள் 41 சதவீதம் பசுமை இல்ல வாயுகளை வெளியேற்றுவதாக, கடந்தாண்டு அறிவியல் தொடர்பான இதழில் வெளியான ஆய்வறிக்கையை பீட்டா அமைப்பினர் மேற்கொள்காட்டுகின்றனர். இதனால், உலகத்தை காப்பற்ற பெண்கள் உடலுறவு மறுப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும், இதன்மூலம் மாமிசம் உண்ணும் ஆண்களுக்கான குழந்தைபேறை தடுக்க வேண்டும் எனவும் பீட்டா அமைப்பு பெண்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க | உறவால் இரவில் அலறல் – பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம்
உணவு அடிப்படையிலான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில், ஒட்டுமொத்தமாக 57 சதவீதத்தை இறைச்சி மற்றும் பால் ஆகியவை வெளியேற்றுவதாக ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, விவசாய நிலங்கள், கால்நடைகள் மற்றும் நில பயன்பாட்டு மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், உலகளாவிய உணவு உற்பத்தி ஆண்டுக்கு 17.318 பில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு காரணமாகிறது எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பீட்டா அமைப்பின் ஜெர்மனிய பிரச்சாரக்குழு தலைவர், டேனியல் காக்ஸ்,’ஆணாதிக்க மனநிலையும் பருவநிலைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு இப்போது அறிவியல் சான்றுகள் கிடைத்துள்ளன. நீங்கள் பருவமழை மாற்ற பிரச்சனையை தீர்க்க விரும்பினால், நீங்கள் இறைச்சி உண்பதை குறைக்க வேண்டும். மேலும் இறைச்சி உண்பது ஆண்மைக்கான அழகு என கட்டமைக்கப்படும் வரை அது நடக்கப்போவதில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, இறைச்சி உண்ணும் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளாததால், அவர்களுக்கு பிறக்காத ஒவ்வொரு குழந்தையும் ஆண்டுக்கு 58.6 டன் கார்பன் டையாக்சைடுக்கு (CO2) சமமான அளவை சேமிக்கிறது. இறைச்சி சாப்பிட்டுவிட்டு, குழந்தைகளை பெற விரும்பும் ஆண்கள், வருங்காலத்தில் பிரச்சனையில்லாமல் இந்த பூமியில் வாழ வேண்டுமென்றால், இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்” எனக்கூறியுள்ளார்.
இறைச்சி உண்ணும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள் என்ற இந்த பீட்டாவின் பிரச்சாரம் ஜெர்மனியில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் முன்னணி பத்திரிகைகள் இந்த பிரச்சாரத்தை நகையாடி வருகின்றனர். அரசியல் ரீதியாகவும் இந்த பிரச்சாரத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் படிக்க | நேற்று கர்ப்பம்… இன்று குழந்தை – அதிர்ச்சியடைந்த தாய்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ