மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது மற்றும் அதிக வட்டி வருவாய் தரக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே.
இதன் காரணமாக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்கள் அந்த முதலீட்டை திரும்ப எடுக்கும்போது கட்டணங்கள் உண்டா? என்னென்ன கட்டணங்கள்? என்பதை தற்போது பார்ப்போம்.
ஓப்பன் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட்கள்
பொதுவாக ஓப்பன் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தால் அந்த முதலீட்டை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்ப பெற்றால் எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்கு முன்பே ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை திரும்ப பெற விரும்பினால், வெளியேற்ற கட்டணம் விதிக்கப்படுகிறது.
வெளியேற்ற கட்டணம்
மியூச்சுவல் ஃபண்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தை பூர்த்தி செய்வதற்கு முன் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றால், வெளியேற்றக் கட்டணம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பெறப்படும். இந்த சதவீதம் ஒவ்வொரு ஃபண்ட்டுக்கும் வித்தியாசம் இருக்கும். நீண்டகால முதலீட்டு திட்டத்தில் குறுகியகால முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தடுப்பதற்காக இந்த வெளியேற்ற கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர்
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்னரே முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் உள்ள யூனிட்களைப் பணமாக்கினால், NAVயின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வெளியேற்ற கட்டணமாக வசூலிக்கப்படும். குறிப்பாக முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் பணம் திரும்ப எடுத்தால், அதற்கு 1% வெளியேற்ற கட்டணம் விதிக்கப்படும்.
உதாரணம்
உதாரணமாக ஒரு நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் NAV ரூ.100 என்றால் அதில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்கு முன்பே உங்கள் முதலீட்டை நீங்கள் பெற்றால், ஒரு யூனிட்டுக்கு நீங்கள் 99 ரூபாய் மட்டுமே பெறுவீர்கள். ஏனெனில் 1% வெளியேற்ற கட்டணம் பிடித்தம் செய்யப்படும். எனவே நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போதே எவ்வளவு காலம் முதலீட்டை வைத்திருக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனால் வெளியேற்ற கட்டணம் இல்லாமல் முதலீட்டை பாதுகாக்கலாம்.
பத்திரப் பரிவர்த்தனை வரி
மேலும் ஈக்விட்டி சார்ந்த நிதிப் பரிவர்த்தனைகள் STT என்ற பத்திர பரிவர்த்தனை வரிக்கு உட்பட்டவை. இதனால் யூனிட்களை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ ஒவ்வொரு முறையும் உங்கள் பரிவர்த்தனைக்கான செலவுடன் STTஐயும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Are there any withdrawal charges from mutual fund units?
Are there any withdrawal charges from mutual fund units? | மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களில் இருந்து பணத்தை எடுக்கும்போது கட்டணங்கள் உண்டா?