முல்லை பெரியாறில் 142 அடி நீர் நீங்கள் எப்படி கேட்க முடியும்?.. உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் 142 அடி நீரை தேக்க உத்தரவிடும்படி கோரிய பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த நாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பாசனத்திற்கு போதிய நீர் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவுக்கு நீரை தேக்கினால், தேவைப்படும் நேரத்தில் விவசாயிகளுக்கு அது உதவியாக இருக்கும்.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அணையில் 142 அடிக்கு நீரை தேக்க கேரள அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, ஆண்டு முழுவதும் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கி வைக்க உத்தரவிட வேண்டும்’ என கோரினார். இந்த மனு நீதிபதிகள் சந்திரசூட், ஹேமா கோலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இதுபோன்ற உத்தரவுகளை நீங்கள் எப்படி கேட்க முடியும்? அதற்கு என்ன அதிகாரம் உள்ளது? ஏதேனும் கோரிக்கை தேவைப்பட்டால் தமிழக அரசிடமோ அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தையோ நாடுங்கள்,’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.