லண்டன்: இங்கிலாந்தின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் பாதுகாவலர் களாக வரும் நபர்கள், போலிக்கைகளுடன் வலம் வருவதாகவும், உண்மையான கையில் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனர் எனவும் இணையத்தில் போட்டோவுடன் கூடிய தகவல்கள் வைரலாக பரவியுள்ளன.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப்பின், இளவரசராக இருந்த சார்லஸ், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இயைடுத்து மன்னர் மூன்றாம் சார்லஸின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் மெய்க்காப்பாளர்கள் வருகின்றனர். மன்னர் சார்லஸ் பொது மக்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறும் சில போட்டோக்கள் வெளியாயின. அதில் மன்னர் சார்லஸுடன் வரும் மெய்க்காப்பாளர்களின் கை போலிக் கை போல் தெரிகிறது. அந்தப் படத்தை சுட்டிக்காட்டி, ‘டிக்டாக்’ நபர்கள் இஷ்டத்துக்கு தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
மெய்க்காப்பாளர்கள், தங்களின் கைகளில் ஆயுதத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதால், அவர்கள் போலிக் கைகளை பயன்படுத்துகின்றனர் என சிலர் கூறியுள்ளனர். மன்னர் சார்லஸின் மற்றொரு பாதுகாவலர் தனது ஒரு கையை, மற்றொரு கை மேல் வைத்து நிற்கிறார். அதில் ஒரு போலிக் கை அசையாமல் இருப்பதாக மற்றொரு டிக்டாக் நபர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், பாதுகாவலரின் கோட் புடைத்த நிலையில் இருப்பதாகவும், அதற்குள் அவரின் உண்மையான கை இருக்கலாம் எனவும் அந்த நபர் கூறியுள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் 14 லட்சம் முறை பார்க்கப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக 6,700 கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. விஐபி.க்களின் பாதுகாவலர்கள் இது போன்ற யுக்திகளை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான் என ஒருவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.