மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (20) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய, ஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி மனோரஞ்சன் பெரேராவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக பீ.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக பி.எச்.சி. ரத்நாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எஸ். ஹெட்டியாரச்சி ஆகியோரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கு மேலதிகமாக, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலைவராக எல்.எச். ரஞ்சித் சோபாலவின் நியமனத்துக்கும் இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தின் (LECO) தலைவராக அதுல பிரியதர்ஷன டி. சில்வாவின் நியமனத்துக்கும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவராக நிஷாந்த ரணதுங்கவின் நியமனத்துக்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.