ரிஷப் பண்ட்? தினேஷ் கார்த்திக்? யாரை களமிறக்கலாம்.. ரோஹித் ஷர்மாவுக்கு உதவிய ஐபிஎல் அனுபவம்!

நாக்பூர்: ஆஸி. அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி ஓவரை சந்திக்க ரிஷப் பண்ட்டை களமிறக்காதது ஏன் என்று இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக பெய்த மழைக் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், டாஸ் போடுவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானது. இதனால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மேத்யூ வேட் மற்றும் ஆரோன் ஃபின்ச்சின் அபாரமான ஆட்டத்தால் 8 ஓவர்களுக்கு 90/5 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணி, ஆடம் ஷாம்பா ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், தடுமாறியது.

களம் புகுந்த தினேஷ் கார்த்திக்

கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது, ஹர்திக் மற்றும் ரோஹித் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ஆனால் முக்கியமான நேரத்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

ஃபினிஷர் தினேஷ் கார்த்திக்

ஃபினிஷர் தினேஷ் கார்த்திக்

இதன்பின்னர் கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரில் சந்தித்த முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் சிக்சர் விளாசியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் தோனியை பார்ப்பது போலவே இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் உலகக்கோப்பைத் தொடருக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டது சரியான முடிவு என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ரிஷப் பண்ட் வராதது ஏன்?

ரிஷப் பண்ட் வராதது ஏன்?

அதேபோல் இளம் வீரரான ரிஷப் பண்ட்-ஐ களமிறக்காமல் தினேஷ் கார்த்திக்கை அந்த நேரத்தில் களமிறக்கியது ஏன் என்று ஒரு சாரார் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதே கேள்வியை வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் ரோஹித் ஷர்மாவிடம் கேட்டார். அதற்கு ரோஹித் ஷர்மா, ஹர்திக் ஆட்டமிழந்த பின் ரிஷப் பண்ட்டா அல்லது தினேஷ் கார்த்திக்கா என்று முடிவு செய்ய ஒரு நிமிடம் தடுமாறினேன்.

ரோஹித் ஷர்மா விளக்கம்

ரோஹித் ஷர்மா விளக்கம்

பின்னர் மும்பை அணியில் டேனிடல் சாம்ஸ் ஆடியதால், அவர் அதிகமாக கட்டர்ஸ் வகை பந்துகளை வீசுவார் என்பது நினைவுக்கு வந்தது. அதனால் கட்டர்ஸ் வகை பந்துகளை எதிர்கொள்ள தினேஷ் கார்த்திக் தான் சரி என்று முடிவு செய்து களமிறக்கினோம். அவரால் என்ன செய்ய முடியும் என்று களத்திலேயே நிரூபித்துவிட்டார். தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை முடித்தது மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

 கேப்டன் ரோஹித்

கேப்டன் ரோஹித்

முதல் போட்டியில் உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்யப்படாத உமேஷ் யாதவ் களமிறங்கியது ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்களை பெற்ற நிலையில், அந்த விமர்சனங்களை எல்லாம் ஒரே போட்டியில் தவிடுபொடியாக்கும் வகையில் நேற்றைய போட்டியில் செயல்பட்டுள்ளார் . குறிப்பாக அக்சர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை பயன்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.