இந்தியாவின் ஸ்பாட் அன்னிய செலாவணி (FX) கையிருப்பு செப்டம்பர் 9 வரையிலான வாரத்தில் 551 பில்லியன் டாலராகக் உள்ளது.
இந்தத் தொகை அடுத்த 8.4 மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என உலகளாவிய தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் சூப்பர் தான், ஆனா பொருளாதாரம்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி அதிரடி..!
ஏற்றுமதி
உலகளாவிய தேவை மந்தமான காரணத்தால் கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எண்ணெய் அல்லாத பொருட்களின் அளவும், மதிப்பும் குறைந்துள்ளது.
விண்ட்ஃபால் வரி
மேலும் ஜூலை தொடக்கத்தில் மத்திய அரசு பெட்ரோல்/ஜெட் எரிபொருளின் ஏற்றுமதிக்கு விண்ட்ஃபால் வரிகளை விதித்தது வாயிலாகவும் ஏற்றுமதி குறைந்திருக்க வாய்ப்புள்ளது என மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இதேபோல் இந்திய ரிசர்வ் வங்கி இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை மோர்கன் ஸ்டான்லி 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது 50 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
இதேபோல் டிசம்பர் கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் எனக் கணித்திருந்த நிலையில் 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் என எதிர்பார்க்கிறது மோர்கன் ஸ்டான்லி அமைப்பு. இதோடு உணவு பணவீக்க அளவையும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டில் 6.8 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு
இதற்கிடையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து ஏழாவது வாரமாகச் சரிந்து, செப்டம்பர் 16 வரையிலான வாரத்தில் 545.652 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் 8.4 மாத அளவை விடவும் குறைவாக உள்ளது.
அக்டோபர் 2020
இது அக்டோபர் 2, 2020க்குப் பிறகு மிகக் குறைந்த அளவு என இந்திய ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளி விவரம் கூறுகிறது.முந்தைய வார இறுதியில் கையிருப்பு $550.871 பில்லியன்களாக இருந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு
இதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாய் அளவீட்டை தாண்டியிருக்கும் நிலையில் இதைச் சரி செய்ய ரெப்போ விகிதத்தை உயர்த்துவது மட்டும் அல்லாமல் டாலர் கையிருப்பை விற்பனை செய்யத் திட்டமிட்டு வருகிறது ரிசர்வ் வங்கி.
India forex reserves enough only for 8 months imports says Morgan Stanley
India forex reserves enough only for 8 months imports says Morgan Stanley