திருச்சியில், இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி மாநகரில் இன்று (செப்.24-ம் தேதி) முதல், வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது.
பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41-ன் கீழ் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.