உலகம் முழுவதும் பிரபலமாக பல கேட்ஜெட்கள் உள்ளன. அதில் டெக்னாலஜி வசதி கொண்ட வாட்ச் என்றால் முதல் இடத்தில் இருபது ஆப்பிள் நிறுவனத்தின் iWatch ஆகும்.
இந்த வாட்சுகளில் நினைத்துப்பார்க்கமுடியாது பல வசதிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. மேலும் இவை ஆபத்து நேரத்தில் உதவும் கருவியாகவும் உள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பலர் இந்த ஆப்பிள் வாட்ச்களை மிகவும் நம்பிக்கையுடன் வாங்குகிறார்கள்.
தற்போது இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் அதன் Pixel watch ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான 30 நொடிகள் அடங்கிய டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பல கலர் ஆப்ஷன்களில் இந்த வாட்சுகள் வருகின்றன.
அதில் Stainless Steel, Black மற்றும் Rose Gold கேஸ் கொண்ட வாட்ச் டிஸ்பிலே. மேலும் ,பல வகை வாட்ச் பேண்ட் உள்ளன உதாரணமாக Hazel Lemongrass (yellow/green), Chalk (white/beige), Charcoal (gray), and Obsidian ஆகிய பேண்ட் வசதிகள் இடம்பெற்றுள்ளன.
கூகுள் நிறுவனம் அதன் பிரபல Pixel 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் pixel வாட்ச் ஆகியவற்றை ‘Made By Google’ எனும் நிகச்சியில் வெளியிடவுள்ளது. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை இந்த வாட்ச் அணிந்து செல்வது போன்ற வீடியோ பரவியது.
இந்த வாட்சின் Bluetooth/Wi-Fi வெர்ஷன் 349.99 டாலர் ( இந்திய ரூபாய் மதிப்பில் 27,800 ரூபாய் ) விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. ஆனால் இந்தியாவிற்கு இதன் விலை மேலும் குறைத்து விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.
iPhone வாங்க இதுவே சரியான நேரம்! Amazon மற்றும் Flipkart விற்பனையில் சிறந்த டீல்!
இந்த வாட்சில் OLED டிஸ்பிலே வசதி, Exynos 9110 சிப் வசதி, 1.5GB/2GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் வசதி கொண்டிருக்கும். கூகுள் நிறுவனத்தின் இந்த முதல் ஸ்மார்ட் வாட்ச் கூடுதல் processor கொண்டு அறிமுகம் ஆகும் என்று தெரிகிறது. இந்த வாட்ச் எந்த வகை வசதிகள் மற்றும் டெக்னாலஜி கொண்டிருக்கும் என்பது அதன் அறிமுகம் அன்று தெரியவரும். நிச்சயம் மக்கள் வியக்கும் அளவிற்கு வசதிகளை எதிர்பார்க்கலாம்.
OnePlus 10R Prime Blue Edition: இந்தியாவில் வெளியான புதிய எடிஷன் ஒன்பிளஸ் போன்!
தற்போது புதிய ஆப்பிள் வாட்ச் ஆரம்ப விலையாக இந்தியாவில் 45,900 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக வசதிகளுடன் கூகுள் நிறுவனம் அதன் வாட்சை அறிமுகம் செய்தால் இவ்வளவு குறைந்த விலைக்கு சிறந்த ஸ்மார்ட் வாட்ச் என்ற பெயர் பெரும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்