அரசியலின் குரல்வளையை ஆன்மீகமும் ஆன்மீகத்தின் குரல்வளையை அரசியலும் பிடிப்பது தகாது!

அரசியலின் குரல்வளையை ஆன்மீகம் பிடிப்பதும் ஆன்மீகத்தின் குரல் வளையை அரசியல் பிடிப்பதும் தகாது இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம் என வைரமுத்து கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் தனியார் திருமண மகாலில் கவிஞர் இலக்கியா நடராஜனின் “பெயர் தெரியாத பறவையென்றும்” கவிதைகள் மற்றும் “மயானக்கரை ஜனனங்கள்” சிறுகதைகள் ஆகிய இரு நூல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களின் ஆன்மிகம் மற்றும் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைரமுத்து அரசியல் ஆன்மீகம் பற்றி கேள்விக்கு அரசியல் வழியே ஆன்மீகமும் ஆன்மீகத்தின் வழியே அரசியலும் எல்லா நூற்றாண்டுகளிலும் எல்லா தேசிய இனங்களிலும் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன பல நேரங்களில் அரசியலையே ஆன்மீகம் தான் தீர்மானித்தது இந்த வரலாற்றையும் நீங்கள் படித்திருப்பீர்கள் ஆனால் அரசியலின் குரல்வலையை ஆன்மீகம் பிடிப்பதும் ஆன்மீகத்தின் குரல் வளையை அரசியல் பிடிப்பதும் தகாது என்பது என் எண்ணம் இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.