வாஷிங்டன்
:
ஐநாக்ஸ்,
3
டி
தொழில்
நுட்பத்தில்
மீண்டும்
வெளியான
அவ்தார்
திரைப்படம்
வசூலை
வாரிக்குவித்து
வருகிறது.
ஹாலிவுட்
இயக்குனர்
ஜேம்ஸ்
கேமரூன்
இயக்கத்தில்
கடந்த
2009
ஆம்
ஆண்டு
அவதார்
திரைப்படம்
உலகம்
முழுவதும்
வெளியாகி
வசூல்
சாதனை
நிகழ்த்தியது.
ரசிகர்களுக்கு
புதிய
காட்சி
அனுபவத்தை
கொடுக்கும்
வகையில்
புதுமையான
தொழில்நுட்பங்களை
பயன்படுத்தி
அவதார்
படத்தை
கேம்ஸ்
கேமரூன்
உருவாக்கி
இருந்தார்.
இந்த
படத்தின்
வெற்றியை
தொடர்ந்து
அவதார்
படத்தின்
அடுத்த
பாகங்களை
உருவாக்க
உள்ளதாக
ஜேம்ஸ்
கேமரூன்
அறிவித்தார்.
வசூலை
வாரிக்குவித்த
படம்
டைட்டானிக்,
தி
டெர்மினேட்டர்
மற்றும்
டெர்மினேட்டர்
2:
ஜட்ஜ்மென்ட்
டே
போன்ற
பிளாக்
பஸ்டர்
வெற்றிப்படங்களை
தயாரித்த
தயாரித்த
கனேடிய
திரைப்பட
தயாரிப்பாளர்
ஜேம்ஸ்
கேமரூன்
1500
கோடி
ரூபாய்
அளவில்
அவதார்
திரைப்படத்தை
இயக்கி
இருந்தார்.
தனி
உலகத்தில்
வாழும்
அவதார்களை
கண்காணிக்க
அனுப்பப்படும்
ஹீரோ
அவர்கள்
இடத்தை
ஆக்கிரமிப்பதை
எதிர்த்து
அவதார்களுடன்
சேர்ந்து
வெல்வதே
கதை.
இப்படம்
சிறந்த
ஒளிப்பதிவு,
சிறந்த
கலை
இயக்கம்
மற்றும்
சிறந்த
விஷுவல்
எஃபெக்ட்களுக்கான
மூன்று
ஆஸ்கார்
விருதுகளை
வென்றது.
அவதார்
ரீ
ரிலீஸ்
செப்டம்பர்
23-ந்தேதி
அவதார்
முதல்
பாகம்
மீண்டும்
ஐமேக்ஸ்,
டால்பி
வசதியுடன்
திரையில்
மீண்டும்
வெளியாகி
வசூலை
குவித்து
வருகிறது.
வார
இறுதியில்
பாக்ஸ்
ஆபிஸ்
கலெக்ஷன்
பிரான்ஸ்,
கொரியா,
சவூதி
அரேபியா,
பெல்ஜியம்
மற்றும்
பிலிப்பைன்ஸ்
ஆகிய
நாடுகளில்
இருந்து
அதன்
மொத்த
வருவாய்
87
ஆயிரம்
டாலராக
இருந்துள்ளது.
வசூல்
அதிகரிக்கும்
இந்தியாவில்
இத்திரைப்படம்
ரூ
1.85
கோடி
ரூபாயை
வசூலித்துள்ளது.
இது
மற்ற
புதிய
படங்களை
விட
சாதாரண
விலையில்
அதிக
திரையரங்களில்
டிக்கெட்டுகள்
விற்கப்பட்டதால்
படம்
அதிக
வருவாயை
ஈட்டி
உள்ளது.
இன்று
ஞாயிற்றுக்கிழமை
என்பதால்
இதன்
வருவாய்
மேலும்
அதிகரிக்கும்
என்று
எதிர்பார்க்ப்படுகிறது.
அவதார்
2
டிசம்பர்
16ம்
தேதி
“அவதார்
2″
வெளியாக
உள்ள
நிலையில்
சமீபத்தில்
இந்த
படத்தின்
டீசர்
வெளியாகி
உலகம்
முழுவதும்
ரசிகர்களிடையே
பெரும்
வைரலாக
இருந்து
வருகிறது.
24
மணி
நேரத்தில்
148
மில்லியன்
பார்வைகளை
அவதார்
2
டீசர்
பெற்றது.