இந்தியாவை விட்டு வெளி நாடுகளுக்கு சென்ற தலைவர்கள்.. ஏன் தெரியுமா?

இந்திய வணிகங்களை வெளி நாடுகளில் விரிவுபடுத்த திட்டமிடுவது ஒரு பொதுவான நிகழ்வு தான். தங்களது விருப்பமான சந்தைகளுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விஷயம் தான்.

இது வணிகத் தலைவர்கள் மற்றொரு நாடுகளுக்கு புலம்பெயர வழிவகுக்கிறது. குறிப்பாக அரசியல் மாற்றங்கள், பொருளாதார நிலை என பலவும் அவர்களுக்கு மிக பாதுகாப்பான ஒன்றாக அமைகின்றன.எனினும் சமீபத்திய ஆண்டுகளாக இது கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

9 வயதில் ஆப் டெவலப்பர்.. அசத்தும் இந்திய சிறுமிகள்.. வாழ்த்து தெரிவித்த ஆப்பிள் டிம் குக்!

அப்பல்லோ டயர்ஸ்

அப்பல்லோ டயர்ஸ்

உதாரணத்திற்கு அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான நீரஜ் கன்வார், கடந்த 2013ல் அமெரிக்க நிறுவனமான கூப்பர் டயர்ஸ் நிறுவனத்தின் பங்கினை வாங்க நினைத்தபோது லண்டனுக்கு சென்றார். அங்கிருந்து சர்வதேச அளவில் தனது வணிகத்தினை செயல்படுத்துவது அவருக்கு மிக எளிதாக அமைந்தது.

நல்ல லாபம்

நல்ல லாபம்

நான் இந்தியாவில் இருந்திருந்தால், இந்திய சந்தையை மட்டுமே கண்கானித்து கொண்டிருப்பேன். இந்தியா சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில் ஐரோப்பாவும் எண்ணெய் விலை அதிகரிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளால் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. எனினும் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது என்கிறார் கன்வார்.

ஈச்சர் மோட்டார்ஸ் & ஹீரோ சைக்கிள்ஸ்
 

ஈச்சர் மோட்டார்ஸ் & ஹீரோ சைக்கிள்ஸ்

இதே போல ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்டியும் தலைமை செயல் அதிகாரியுமான சித்தார்த் லால் 2015ல் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். இவர் ராயல் என்ஃபீல்டின் அருகில் இருந்தார்.

இதேபோல ஹீரோ சைக்கிள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான பங்கஜ் ஆண்டுக்கு 9 மாதங்கள் லண்டனில் ஐரோப்பிய இ-பைக் சந்தையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

சீரம் இன்ஸ்டிடியூட் & ஆனந்த் மஹிந்திரா

சீரம் இன்ஸ்டிடியூட் & ஆனந்த் மஹிந்திரா

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா, லண்டனுக்கும் புனேவுக்கும் இடையே செல்கிறார்.

இதேபோன்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் தனது நேரத்தினை பெரும்பாலும் வெளி நாடுகளில் பயணித்து வருவதாக கூறப்படுகிறது.

வெளி நாடா & வணிகமா?

வெளி நாடா & வணிகமா?

ஓய் ஆக்ஸிஸ் மிடில் டிஎம்சிசி-யின் தலைவர் கிளின்ட் கானும், வெளி நாடுகளில் தங்களது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தொழிலதிபர்களில் பெரும்பாலானவர்கள் வெளி நாடுகளில் நிரந்தமாக இருக்க வேண்டுமா? அல்லது தொழிலை நடத்த வேண்டுமா? என்பதற்கு, பலரும் இரண்டையும் செய்ய வேண்டும் என்றே கிட்டதட்ட 90% பேர் எதிர்பார்க்கின்றனர்.

வசிப்பிடமும் மாற்றம்

வசிப்பிடமும் மாற்றம்

தொழிலதிபர்கள் தங்கள் வணிகத்தினை மட்டும் விரிவாக்கம் செய்ய நினைத்த காலம் மலையேறி விட்டது. பலரும் தற்போது தங்களது வசிப்பிடத்தையும் அருகில் அமைக்க விரும்புகிறார்கள் என்று கிளின்ட் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா

English summary

why India’s top leading companies leaders and executives are moving foreign countries?

why India’s top leading companies leaders and executives are moving foreign countries?/இந்தியாவை விட்டு வெளி நாடுகளுக்கு சென்ற தலைவர்கள்.. ஏன் தெரியுமா?

Story first published: Sunday, September 25, 2022, 21:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.