உதயநிதி கொடுத்த லிஸ்ட்… யார் அந்த 15 பேர்? அறிவாலயத்தில் மல்லுக்கட்டு!

அடுத்த மாவட்ட செயலாளர்கள் யார்? என்பது தான்

வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக தற்போது பேசப்பட்டு வருகிறது. உதாரணமாக கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு (தொண்டாமுத்தூர் ரவி), கோவை மாநகர் (நா.கார்த்திக்), கோவை தெற்கு (தளபதி முருகேஷ்) ஆகியவற்றுக்கு புதிய மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அடங்கிய லிஸ்ட் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக உடன்பிறப்புகள் வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.

புகார்கள் மற்றும் வழக்குகளை சில மாவட்ட செயலாளர்கள் எதிர்கொண்டு வருவதால் அவர்கள் தூக்கி அடிக்கப்படுவார்கள் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த லிஸ்டில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதற்கிடையில் ஐபேக் டீம் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி கொடுக்க,

தனி லிஸ்டை கொடுக்க அறிவாலயத்தில் மல்லுக்கட்டு நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உதயநிதியை பொறுத்தவரை திமுக இளைஞர் அணிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறார். படிப்படியாக இளைஞர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்து புது ரத்தம் பாய்ச்ச திட்டமிட்டுள்ளார். இது கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் என்று கணக்கு போட்டு வைத்துள்ளார். கட்சி சீனியர்கள் மற்றும் அமைச்சர்களை பொறுத்தவரை தங்களுடைய மாவட்ட செயலாளர் பதவிகளை தக்க வைத்துக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம் தங்களுடைய ஆதரவாளர்களை வைத்து அவர்களும் ஒரு கணக்கு போட்டு வைத்திருப்பர். அப்படி ஸ்டாலினிடம் சிலரை முன்னிறுத்தும் போது மூன்று முனை போட்டியாக மாறிவிடும். முன்னதாக குறைந்தது 15 மாவட்ட செயலாளர்களை ஆவது மாற்றி விட வேண்டும் என்று முதல்வரும், திமுக தலைவருமான

திட்டமிட்டுள்ளார். எனவே மேற்குறிப்பிட்ட மூன்று லிஸ்டில் எதை தேர்வு செய்யப் போகிறார்?

இல்லை புதுசா எதுவும் ரெடி பண்ணப் போகிறாரா? சூட்கேஸ்களுடன் முக்கியப் புள்ளிகளை பிடித்து லாபி செய்ய கிளம்பிய கட்சியினரின் கனவு பலிக்குமா? என அடுத்தடுத்து கேள்விக் கணைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. திமுகவிற்கு அடுத்த சவால் என்பது வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல். இதையொட்டி தற்போது முதலே தயாராக வேண்டிய தேவையிருக்கிறது. எனவே கட்சியின் எதிர்காலம் கருதி சரியான ஆட்களை ஸ்டாலின் தேர்வு செய்ய வேண்டும்.

அந்த வகையில் மாவட்ட செயலாளர்கள் விஷயத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதற்கிடையில் யாரை பிடித்தால் காரியம் நடக்கும் என்று கண்கொத்தி பாம்பாக கவனித்திருந்து, அவர்கள் மூலம் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க பலரும் தீவிரம் காட்டி வருகின்றனர். அடுத்த சில நாட்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் யார், யார் என்பது தெரிந்துவிடும் என்று முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.