எஸ்பிஐ Vs அஞ்சலக FD திட்டங்கள்.. முதிர்வு காலத்தில் ரூ.10 கிடைக்க எவ்வளவு முதலீடு?

SBI Vs post office FD: பிக்சட் டெபாசிட் திட்டங்கள் இன்றும் சாமானிய மக்கள் மத்தியில் பிரபலமான திட்டங்களாக உள்ளன. இன்று என்ன தான் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், எஃப்டி என்பது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த எஃப்டி திட்டத்தில் எது சிறந்தது? எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட்டா, அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்டா? இதில் எதில் வட்டி விகிதம் அதிகம்? எது சிறந்த தேர்வாக இருக்கும்? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்?

ரிஸ்க் இல்லா எஃப்டி.. எஸ்பிஐயில் எவ்வளவு வட்டி விகிதம்..!

 SBI Vs post office FD

SBI Vs post office FD

பொதுவாக பிக்சட் டெபாசிட் என்பது நிரந்தர வருமானம் தரும் ஒரு திட்டமாக உள்ளது. எனினும் இதிலும் சில சலுகைகள் கிடைக்கிறது. குறிப்பாக வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு DICGC இன்சூரன்ஸ் திட்டம் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையில் க்ளைம் செய்து கொள்ளலாம். இப்படிப்பட்ட நிலையில் எஸ்பிஐ மற்றும் அஞ்சலக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் எது சிறந்தது? வாருங்கள் பார்க்கலாம்.

எஸ்பிஐ உத்சவ் டெபாசிட்

எஸ்பிஐ உத்சவ் டெபாசிட்

எஸ்பிஐ மற்றும் அஞ்சலக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதிர்வு தொகையாக 10 லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும் எனில் எவ்வளவு டெபாசிட் செய்யணும். குறிப்பாக எஸ்பிஐயின் உத்சவ் டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் என்பது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ சுதந்திர தின விழாவை ஒட்டி உத்சவ் டெபாசிட் என்ற திட்டத்தினை வழங்கியது. இந்த திட்டத்தில் வரவிருக்கும் அக்டோபர் 28 வரையில் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம். இது ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

எவ்வளவு டெபாசிட்?
 

எவ்வளவு டெபாசிட்?

இந்த டெபாசிட் திட்டத்தின் காலம் 1000 நாட்களாகும். இதற்கு வட்டி விகிதம் 1000 நாட்களுக்கு 6.1% வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு வழக்கத்தினை விட கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாக கிடைக்கும். இந்த சிறப்பு டெபாசிட் திட்டத்தில் 8.35 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோமானால், 3 வருட காலத்தில் 6.10% என வட்டி விகிதம் கணக்கிட்டால், 10.01 லட்சம் ரூபாயாக கிடைக்கும். ஆக இந்த 3 வருட காலகட்டத்தில் 1,66,296 ரூபாயாக வட்டி வருவாய் கிடைக்கும்.

அஞ்சலகத்தின் பிக்சட் டெபாசிட்

அஞ்சலகத்தின் பிக்சட் டெபாசிட்

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த டைம் டெபாசிட்டினை 1, 2 ,3 மற்றும் 5 ஆண்டுகள் வரையில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.50% வரையில் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 5 வருட முதிர்வு கால திட்டத்திற்கு 6.7% வட்டியும் கிடைக்கிறது

அஞ்சலகத்தின் FD முதிர்வு தொகை

அஞ்சலகத்தின் FD முதிர்வு தொகை

இந்த திட்டத்தில் 8.50 லட்சம் ரூபாயினை 5.5% வட்டி விகிதத்தில் முதலீடு செய்தோமானால், 3 வருடத்திற்கு பிறகு 10.01 லட்சம் ரூபாய் முதிர்வாக கிடைக்கும்.

இதே 7,18,000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் முதலீடு செய்தால், 5 வருட காலத்திற்கு பிறகு, முதிர்வு தொகையாக 10 லட்சம் ரூபாயாக முதிர்வு தொகையாக கிடைக்கும்.

வரி விலக்கு உண்டா?

வரி விலக்கு உண்டா?

அஞ்சல் அலுவலகனள் மற்றும் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்யும்போது 10% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நீங்கள் பான் கார்டினை சமர்பிக்கவில்லை எனில், 20% என்ற விகிதத்திக் இருக்கலாம். இதில் 15ஜி மற்றும் 15ஹெச் மூலம் வரி விலக்கு பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI Vs post office Fixed deposit: How much to invest to get Rs 10 lakh as maturity?

SBI Vs post office Fixed deposit: How much to invest to get Rs 10 lakh as maturity?

Story first published: Sunday, September 25, 2022, 16:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.