அமெரிக்காவில் நிரந்தரமான வசிப்பதற்காக கிரீன் கார்டுகள் வேண்டும் என விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். ஏப்ரல் 2023க்குள் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய ஐடி துறை சார்ந்த பொறியாளர்களுக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் கிரீன் ஹைட்ரஜன், கீரின் அம்மோனியா திட்டம்.. தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
கொரோனாவால் தேங்கிய விண்ணப்பங்கள்
அமெரிக்க அதிகாரிகளின் இந்த பரிந்துரை ஜோ பைடனுக்கு அனுப்புவதற்கு முன்பு மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக தேங்கியுள்ள விண்ணப்பங்களை விரைவில், பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் பயணத் தடைகள் இருந்த நிலையில், கிரீன் கார்டு அப்ரூவல் மிக கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டொனால்டு டிரம்பின் தடை
மேலும் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை. அமெரிக்கர்களுக்கே வேலை என புதியா விசா, கிரீன் கார்டு என அனைத்தையும் முடக்கி வைத்திருந்தார். இதனை புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வந்த பிறகே தடைகள் நீக்கம் செய்யப்பட்டன. இதனால் பல காலாண்டுகளாக தேங்கியிருந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து அனுமதிப்பதில் தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகின்றது.
புதிய பணியமர்த்தல்
இதற்கிடையில் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலனை செய்து அப்ரூவல் செய்ய, அமெரிக்காவின் விசா மையத்திலும் கூடுதலான ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆக இதன் மூலம் விரைவில் கீரின் கார்டு அப்ரூவல் மற்றும் புதிய ஹெச் 1 பி விசா-க்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்
குறிப்பாக குடும்ப அடிப்படையிலான கார்டுகளை கிரீன் கார்டு பயன்பாடுகள் தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும், செயலாக்குவதற்கான சுழற்சி நேரத்தை குறைக்கும் கொள்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறப்படுவதாகவும், மொத்தத்தில் ஆறு மாதங்களுக்குள் இந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு விண்ணப்பம் ஆறு மாதங்களில் முடிக்கப்படாவிட்டால், அது நிறுத்தப்படாது. ஆனால் அது சரியான நேரத்தில் தொடர்ந்து செயலாக்கப்படும் என அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு பலன் எப்படி?
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினால் பெரும் பலனடைவது இந்தியர்கள் தான் எனலாம். ஏனெனில் இன்றும் இந்தியர்கள் தான் அதிகளவில் அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா மூலமும், கிரீன் கார்டுகள் மூலமாகவும் பலன் பெறுகின்றனர். குறிப்பாக ஐடி துறையில் உள்ள ஊழியர்கள் பெரும்பாலும் பலன் அடையலாம்.
US H1B visa, Get Green Card easier: Benefits for Indians
US H1B visa, Get Green Card easier: Benefits for Indians