செவ்வாய் கோள் ஏற்கனவே விண்வெளி குப்பையாகி விட்டது என அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960ல் இருந்து துவங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், இந்தியா, யு.ஏ.இ., சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை செலுத்தியுள்ளன.
இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ரோவர், ஆர்பிட்டர்களின் எடை, தற்போது அங்கு செயல்படும் ரோவர், ஆர்பிட்டர்களின் எடையுடன் ஒப்பிடப்பட்டது. இதில் இதுவரை 7118 கிலோ விண்வெளி குப்பை செவ்வாயில் விடப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டது. இதில் நிராகரிக்கப்பட்ட வன்பொருள், செயலற்ற விண்கலம், தரைப்பரப்பில் மோதிய லேண்டர்கள் அடங்கும்.செவ்வாயில் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை இருந்ததா என ஆய்வு செய்ய, நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலத்தால் சேமிக்கப்பட்டுள்ள பாறை துகள் மாதிரிகளில், இந்த குப்பை பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement