கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலக தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
வரும் 29ஆம் தேதி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது…
நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ.
கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து நிச்சியமாக விலகத் தயார். கூட்டுறவுத் துறையில் முறைக்கேடு நிரூபிக்கவில்லை என்றால் நிதி அமைச்சர் அரசியலில் இருந்து விலகிக் கொள்ள தயாரா என கேள்வி எழுப்பினார்.
கூட்டுறவுத் துறையில் அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் நகைக்கடன் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியும். அதிமுக ஆட்சியில் களங்கம் இல்லாமல் கூட்டுறவுத் துறை செயல்பட்டுள்ளது
கூட்டுறவுத் துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 27 விருதுகளை தமிழக அரசு சார்பில் பெற்றுள்ளோம் அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்துள்ளதை நிரூபிக்க தயராக இருக்க வேண்டும் நிதி அமைச்சருக்கான தகுதி இல்லாத நபரை நிதி அமைச்சராக திமுக நியமித்துள்ளது.
தமிழகத்தில் வரி உயர்வுக்கு நிதி அமைச்சர் மட்டுமே காரணம். இல்லாததை சொல்லி அரசு மீது வெறுப்புணர்வு ஏற்பட நிதி அமைச்சர் காரணம். 48 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM