சிங்கப்பூர் நிறுவனம் வாங்கிய பென்னி பங்கு.. உங்க போர்ட்போலியோவில் இருக்கா?

Multibagger stock: பங்கு சந்தையில் சமீபத்திய அமர்வுகளாக நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? குறிப்பாக பென்னி பங்குகளை வாங்கலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம்.

ஆனால் சிங்கப்பூரினை அடிப்படையாக கொண்ட NAV கேப்பிட்ட VCC நிறுவனம் – NAV கேப்பிட்டல் எமர்ஜிங் ஸ்டார் ஃபண்ட், மைக்ரோகேப் நிறுவன பங்குனை வாங்கியுள்ளது.

இலவசமாக விமானத்தில் செல்ல வேண்டுமா? 50 லட்சம் பேருக்கு வாய்ப்பு தரும் நிறுவனம்!

பென்னி பங்கினை வாங்கிய FII

பென்னி பங்கினை வாங்கிய FII

இந்த மைக்ரோகேப் நிறுவனமான குஜராத் ஹை ஸ்பின் நிறுவனத்தின் 1.10 லட்சம் பங்குகளை செப்டம்பர் 22 அன்று சிங்கப்பூர்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் விலை 11.40 ரூபாய் என்ற லெவலில் வாங்கியுள்ளதாக தெரிகிறது. அதாவது 12,54,000 ரூபாய் இதன் மூலம் முதலீடு செய்துள்ளதாகவும் பி எஸ் இ தளத்தின் தரவின் படி அறிய முடிகிறது.

புதிய உச்சம்

புதிய உச்சம்

இதனையடுத்து இந்த மல்டிபேக்கர் பங்கின் விலையானது கடந்த சில அமர்வுகளாக உச்சம் தொட்டு வருகின்றது. இது அதன் புதிய சமீபத்திய உச்சமாக 13.50 ரூபாயினை எட்டியது. கடந்த வெள்ளிக்கிழமையன்றும் இதன் ஏற்றமானது தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில அமர்வுகளாகவே இந்திய சந்தையில் ரத்த களறியானது தொடர்ந்தாலும், இந்த பென்னி பங்கின் விலையானது 10% அதிகரித்து, 12.95 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்துள்ளது.

பங்கு விலை வரலாறு
 

பங்கு விலை வரலாறு

கடந்த 1 மாதத்தில் இப்பங்கின் விலையானது 11.50 ரூபாயில் இருந்து 12.95 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் இதன் முதலீட்டாளார்களுக்கு 12% லாபம் கொடுத்துள்ளது. இதே கடந்த ஆறு மாத காலகட்டத்தில், இந்த மைக்ரோ கேப் பங்கின் விலையானது 9.85 ரூபாயில் இருந்து 12.95 ரூபாயாக 20% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இது வரையில் 65% ஏற்றம் கண்டுள்ளது. இது 7.86 ரூபாயில் இருந்து, 12.95 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

இரு மடங்கு லாபம்

இரு மடங்கு லாபம்

இதே கடந்த ஒரு ஆண்டில் இப்பங்கின் விலையானது இருமடங்கு அதிகரித்துள்ளது. இது 6.40 ரூபாயில் இருந்து, 12.95 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இப்பங்கின் விலையானது தொடர்ச்சியாக கொரோனாவின் வருகைக்கு பிறகு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதே கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது 3 ரூபாயில் இருந்து 12.95 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

singapore based FII buys in this microcap company: do you have this multibagger stock?

singapore based FII buys in this microcap company: do you have this multibagger stock?

Story first published: Sunday, September 25, 2022, 10:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.