பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டுப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு உயிர் தியாகம் செய்த பகத் சிங்கின் பிறந்தநாள் செப்டம்பர் 28 தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பகத் சிங்கிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் பிறந்த பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் விமான நிலையம் என பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரவிருக்கிறது. இந்த நாளன்று தான் நாம் பாரத அன்னையின் வீரம்நிறைந்த உத்தம புதல்வானான பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம்.
பகத் சிங் அவர்களின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு மரியாதையை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. சண்டீகட்டின் விமான நிலையத்திற்கு இனி தியாகி பகத் சிங் அவர்களின் பெயர் சூட்டப்படும்.
இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. சண்டிகர், பஞ்ஜாப், ஹரியானா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். வரும் செப்டம்பர் 28ஆம் தேதியின் போது, ஒவ்வொரு இளைஞரும் புதிய ஒரு முயற்சியில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பேசினார்.
newstm.in