செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மர்ம பொருள் வெடித்ததில் விவசாயி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெடித்த பொருள் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மர்ம பொருள் வெடித்ததில் விவசாயி படுகாமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரேபோடு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ் அத்திவாக்கம் கிராமத்தில் விவசாயி வெங்கடாச்சலம் வயல்வெளியில் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு, தீப்பெட்டி அளவில் நூல் சுற்றப்பட்டு சிற பொருள் ஒன்று இருந்துள்ளது. அந்த பொருளை வெங்கடாச்சலம் கையில் எடுத்து பார்த்துள்ளார். ஆனால் அது என்னவென்று விளங்காத நிலையில் அதனை தரையில் வைத்து தனது மண்வெட்டியால் அதனை வெட்டியுள்ளார்.
விசாரணை
அப்போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் அந்த மர்ம பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் என்ன விவசாயியின் உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெங்கடாச்சலத்திற்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மர்ம பொருள் என்னவென்று தெரியவில்லை. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல
இதேபோல கடந்த 2020ம் ஆண்டு சேலத்தில் சாலையில் கிடந்த மர்ம பொருளை வீட்டில் கொண்டு சென்ற இருவர் அதனை பரிசோதித்து பார்த்துள்ளனர். ஆனால் அது என்ன பொருள் என்று தெரியாததால் விழித்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் உள்ள ப்ளக் பாயின்ட்டிலிருந்து அந்த மர்ம பொருளுக்கு மின்சார இணைப்பை அவர்கள் கொடுத்துள்ளனர். இதில் அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஒரு வருஷம் முன்னாடி
அதேபோல கடந்த ஆண்டு திருக்கழுக்குன்றம் பகுதியில் மர்ம பொருள் ஒன்று விவசாயிகளிடமிருந்து மீட்கப்பட்டிருந்தது. இதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புறவழிப்பாதையில் அமைந்துள்ள வடக்குப்பட்டி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து இந்த பொருள் மீட்கப்பட்டது. 3 அடி உயரமும் 32 அடி விட்டமும் கொண்ட அந்தபொருளை காவல்துறையினர் பத்திரமாக கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பின்னர் அது என்ன பொருள் என்கிற விவரம் அறிவிக்கப்படவில்லை.