Gold price today: தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக இந்திய பங்கு சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சரிவில் காணப்பட்டது. இது மேற்கொண்டு சரிவினைக் காணுமா? இது வாங்க சரியான வாய்ப்பா?
அக்டோபர் மாத கான்ட்ராக்டில் 10 கிராமுக்கு 49,399 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 6 மாத குறைந்தபட்ச விலை 49,250 ரூபாயாகும்.
இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2 வருட சரிவான 1643 என்ற லெவலில் முடிவடைந்தது. இது இன்ட்ராடேவில் 1639 டாலர் என்ற லெவலை எட்டியது குறிப்பிடத்தக்கது.
கிரீன் கார்டை விரைவில் பெறலாம்.. இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ் தான்!
முக்கிய சப்போர்ட் லெவல்
தங்கத்தின் உடனடி சப்போர்ட் விலையானது 1620 என்ற லெவலை எட்டலாம். அதனை உடைத்தால் அடுத்த சப்போர்ட் லெவலாக 1580 என்ற லெவலை எட்டலாம். இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 48,800 ரூபாயாகவும், அடுத்ததாக 47,700 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தங்கத்திற்கு ஆதரவளிக்கலாம்
தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பணவீக்கம் பற்றிய கவலையும் இருந்து வருகின்றது. மேற்கொண்டு தங்கம் விலையையும் ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. மேலும் தங்கத்தின் குறைந்த விலையும் வாங்க தூண்டலாம் என்பதால், நீண்டகால நோக்கில் தங்கம் விலை பெரியளவில் குறைய வாய்ப்பில்லை எனலாம்.
வாங்கலாம்
எல்லாவற்றுக்கும் மேலாக தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து ரிலிகேர் புரோக்கிங் ஆய்வறிக்கையின் படி, சர்வதேச சந்தையில் தங்கம் விலயானது 2 வருட சரிவில் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.93% சரிவில் காணப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த அமர்வில் டாலருக்கு எதிராக 81.25 ரூபாயாக சரிவினைக் கண்டது. இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். விழாக்கால பருவத்தில் பிசிகல் தங்கத்த்ன் தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 வருடங்களில் இல்லாதளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இது 113 என்ற லெவலுக்கு எட்டியது. ஆக வரவிருக்கும் நாட்களில் டாலரின் மாற்றம் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மேலும் பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கி மேற்கோண்டு நடவடிக்கையினை கடுமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் வாங்கலாம்
டாலரின் மதிப்பானது ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில், இது மேற்கொண்டு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீண்டும் டெர்மில் தங்கம் விலையில் அழுத்தம் இருந்தாலும், குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஆக நீங்க வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். மீடியம் டெர்மில் இலக்கு விலையானது இந்திய சந்தையில் 49,800 ரூபாயினையும், 51,300 ரூபாயினையும் எட்டலாம் என கணித்துள்ளது.
முக்கிய சப்போர்ட் லெவல்
அதேசமயம் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 1620 டாலர் மற்றும் 1580 டாலர்களை உடைத்தால், இந்திய சந்தையில் 48,800 மற்றும் 47,700 ரூபாய் என்ற லெவலையும் எட்டலாம் என கணித்துள்ளனர். இதற்கு ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், சர்வதேச அளவில் நிலவி வரும் பல அரசியல் பதற்றங்கள் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ரூபாயின் மதிப்பு மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
gold prices at nearly six month low: is it a right time to buy?
gold prices at nearly six month low: is it a right time to buy?/தொடர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க இது சரியான சான்ஸ்.. விழாக்கால பருவத்தில் செம திட்டம்!