நடிகை தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த நடிகை பவுலின் ஜெசிகா என்ற தீபா, சினிமாவின் நடிக்கும் ஆசையில் நான்காண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.
டிக் டாக், யூடியூப், ஷார்ட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என சமூக வலைதலங்களில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். ராட்சசன்’, ‘தெறி’ துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்த பவுலின் ஜெசிகா, ‘வாய்தா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
கடந்த வாரம் அபார்ட்மென்ட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வதாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். ஆனால் அவர் பயன்படுத்திய செல்போன் , டேப் என எதுவும் வீட்டில் இல்லாமல் இருந்தது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜெசிகா தற்கொலை செய்துகொண்டபோது அருகில் வசிக்கும் பிரபாகரன் என்பவர்தான் முதலில் சென்று சடலத்தை பார்த்தது தெரியவந்தது. பிரபாகரை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெசிகா, சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளனர். சிறிது நேரத்தில் பிரபாகரனுக்கு போன் மூலமாக தொடர்புகொண்ட சிராஜுதீன், ஜெசிகா வீட்டின் பூட்டை உடைத்து பார்க்க சொல்லியுள்ளார்.
பிரபாகரனும் கதவை உடைத்து சென்று பார்த்தபோது ஜெசிகா சடலமாக தொங்கியுள்ளார். ஜெசிகா தற்கொலை செய்துகொண்டதை பிரபாகரன் செல்போன் மூலமாக காதலன் சிராஜுதீ்னுக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த பதற்றமும் இல்லாத சிராஜுதீன் , ஜெசிகாவின் செல்போன்கள் மற்றும் டேப்பை எடுத்துவந்து கொடுக்கும் படி சொல்லியுள்ளார். அதன்பிறகே மற்றவர்களுக்கு ஜெசிகா தற்கொலை செய்துகொண்டதை பிரபாகரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அவரிடம் இருந்து ஒரு செல்போனை மட்டும் பறிமுதல் செய்துள்ள போலீசார் அதில் இருந்த தடயங்களை அழிக்கப்பட்டுள்ளதால் சோதனைக்காக அனுப்பியுள்ளனர். ஜெசிகாவின் காதலன் சிராஜுதீனை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு வராமல் இருப்பதாக தெரிகிறது.
காதலர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் தான் ஜெசிகா தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
newstm.in